“திமுக மற்றும் காங்கிரஸ் போர்குற்றவாளிகளே! திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் அதிமுக போராட்டம் – போராட்டத்திற்கு உலகத் தமிழர் பேரவை முழு ஆதரவு!

"திமுக மற்றும் காங்கிரசை போர்குற்றவாளிகளே! திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் அதிமுக போராட்டம் - போராட்டத்திற்கு உலகத் தமிழர் பேரவை முழு ஆதரவு!

“திமுக மற்றும் காங்கிரஸ் போர்குற்றவாளிகளே! திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் அதிமுக போராட்டம் – போராட்டத்திற்கு உலகத் தமிழர் பேரவை முழு ஆதரவு!

திமுக மற்றும் காங்கிரசை போர்குற்றவாளியாக அறிவித்து, திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளதை உலகத் தமிழர் பேரவை வரவேற்று முழு ஆதரவும் தெரிவிக்கிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

மனிதன் உயிர்தான் அனைத்திற்கும் மேம்பட்டது என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட மனித, அதுவும் நமது தமிழினம் ஒட்டு மொத்தமாக 2009 ஈழ இறுதிப்போரில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படும்போது அதை வேடிக்கை பார்த்ததோடு மட்டுமல்லாமல், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தருவது போல நாடகம் நடத்தியது அன்றைய தமிழகத்தை காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி செய்த தி.மு.க-வின் கருணாநிதி ஆட்சி. ஈழப்போரை மறைமுகமாக முன்நின்று நடத்திய அன்றைய மத்தியில் ஆட்சியாளர்களான காங்கிரஸ் கட்சி, இனப்படுகொலைக்கு துணைபோனதை பல்வேறு சான்றுகள் மூலம் நிருபிக்கப்பட்டிருக்கிறது.

தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சில பல வேளைகளில் ஈழ போராட்டத்திற்கு ஆதரவளிப்பது போல நாடகம் நடத்தி தமிழகத்தில் போராட்டம்கள் சிலவற்றை கையிலெடுத்திருந்தாலும், 2009 இறுதிப்போரின் போது 1.5 லட்சம் ஈழத் தமிழர் இனப்படுகொலையை தடுக்காமல், வேடிக்கைப் பார்த்ததோடு அப்படுகொலைக்கு துணையாக இருந்து வந்ததால், இவ்விரு கட்சிகளையும் இனப்படுகொலையாளர்காளாகவே உலகத் தமிழர்களின் எண்ணமாக மனதில் புகைந்து வந்திருக்கிறது.

தமிழகத்து ஆட்சியாளர்களான இன்றைய அ.தி.மு.க.-வின் தீர்மானம், ஈழத் தமிழர் இனப்படுகொலையை அரசியல் செய்வதாக எடுத்துக் கொண்டாலும், உலகம் அறிந்த உண்மை நிலையான திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை போர்குற்றவாளியாக தீர்மானம் நிறைவேற்றி இருப்பது என்பது உலகத் தமிழர்களின் மன நிலையை பிரதிபலிப்பதாகவே உள்ளது.

இதையொட்டி அ.தி.மு.க.-வின் போராட்டத்திற்கு உலகத் தமிழர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து உலக மனித நேயர்களுக்கு ஈழத் தமிழர்களுக்கு எதிரான திமுக மற்றும் காங்கிரசை கட்சிகளின் துரோக செயல்பாட்டை வெளிச்சம்போட்டு காட்ட இப்போராட்டத்திற்கு பேரதரவு நல்க வேண்டுமாய் உலகத் தமிழர் பேரவை கேட்டு கொள்வதோடு, முழு ஆதரவையயும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அக்னி
ஒருங்கிணைப்பாளர்
உலகத் தமிழர் பேரவை

தினபூமி இணையதளத்தில் வெளியான செய்தி

Cong, DMK caught off guard with Rajapaksa LTTE claim – The Pioneer – Daily

https://www.dailypioneer.com/2018/sunday-edition/cong–dmk-caught-off-guard-with-rajapaksa-ltte-claim.html

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: