தமிழர் சாதிகளை சிதைத்து, ஆரிய – திராவிட கொள்கைகள் விதைக்கப்படுகிறதா?

தமிழர் சாதிகளை சிதைத்து, ஆரிய - திராவிட கொள்கைகள் விதைக்கப்படுகிறதா?

தமிழர் சாதிகளை சிதைத்து, ஆரிய – திராவிட கொள்கைகள் விதைக்கப்படுகிறதா?

மனிதர்களுக்குள் உள்ள ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தும் நிறங்கள், பல்லினங்கள், மதங்கள் மற்றும் சாதிகள் ஒழிக்கப்படுவது, தமிழன் கணியன் பூங்குன்றனாரின், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரிகளுக்கேற்ப, தமிழர்களின் கொள்கையாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுவான ஒரு விரும்பம்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


சங்க காலத் தமிழ் சமூகத்தில் சாதி இருந்ததற்கான ஆவணங்கள் கிடைக்கப் பெறவில்லை என்பதாக கருத்துகள் சொல்லப்பட்டு வருகிறது. மனித நாகரிகம் வளர, வளர – மக்கள் தொகைப் பெருக, பெருக – புதிய மக்கள் குழுக்கள் இணைய, இணைய, பல்வேறு புதிய நடைமுறைகளை அன்றைய மக்கள் தலைவர்களால் வகுக்கப்பட்டு வந்ததை யாரும் மறுக்க இயலாது. அந்த வகையில் தங்களது இனம் மற்றும் உறவுகளை பாதுகாக்க குழுக்களின் ஒன்றிணைப்புகள் ஏற்பட்டது. தமிழர்களின் சமூகம் பல உறவுகளின் சங்கமம். ரத்த உறவுகளின் கூட்டமைப்பை, சாதி என வகுத்துக் கொள்ளப்பட்டது. பழங்கால சாதிய அமைப்புகளில் ஏற்றத் தாழ்வற்ற சமச்சீர் சமூகமாகவே இருந்து வந்திருக்கிறது.

காலப்போக்கில், இடையே நுழைந்த சிறிய அளவிளான ஆரியக் கூட்டம், சாதிய அமைப்புக்களை பிரித்தாண்டு, ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தி, தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தது. இதை இன்னும் வலுப்படுத்தி, கொல்லைப்புறம் வழியாக தமிழினத்தினுள் ஊடுருவிய பெருந்தொகையான களப்பினர்களும் குளிர்காய்ந்து கொண்டனர். சுமார் 500 ஆண்டுகளில், குறிப்பாக 20ஆம் நூற்றாண்டுகளில், தமிழினத்தினுள் ஒன்றார கலந்தவிட்ட வடுக களப்பினர்கள், தங்களை திராவிடர்கள் என பரவலாக நிலை நிறுத்த முயன்று, அதில் ஒரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். ஒட்டு மொத்த தமிழ் மக்கள் தொகையில் இவர்கள் குறைந்த சதவீதமிருந்தாலும், திராவிடர்கள் என்ற புதிய பரிணாமத்தோடு உருவான, தெலுங்கர்கள், கன்னடர்கள் மற்றும் மலையாளிகளின் ஆதிக்கம் சில நூற்றாண்டுகள் முதலே தடுக்க முடியாதளவுக்கு தலை தூக்கி, தமிழர்களின் ஆட்சியை தக்க வைத்து கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகாரம் மட்டுமல்லாது பல்வேறு நிலைகளில் திராவிடர்களின் ஆதிக்கம் இன்று வலுபெற்றுள்ளதை காணக்கூடியது.

பல்லாயிரம் ஆண்டுகளாக எல்லா வகையிலும் உயர்ந்து நிற்கும் தமிழினத்திற்குள், நுழைந்த பிற மொழித்தவர்கள், திராவிட போர்வைக்குள் ஒளிந்து கொண்டு, தங்களை பாதுகாத்துக் கொள்ள திராவிட ஆட்சியை உயர்த்தி பிடித்து வருகின்றனர் என்பது வெட்ட வெளிச்சமாக தெரியக்கூடிய ஒன்று. தமிழர்களில் சிலரும் தங்களது சுயநலத்திற்காக திராவிட – வடுக ஆட்சியாளர்களின் அடிவருடியாக இருந்து வந்துள்ளனர் என்பதையும் பார்த்தே கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆரிய, திராவிடத்திலிருந்து பிரித்து, தாங்கள் தமிழர்கள் என்பதை உலகுக்கு காட்டுவதற்கு இன்றைக்கு உள்ள முக்கிய கூறு, தமிழர் சாதிகளே.

இதனால் தான் திராவிட, வடுக கொள்கைகளுள் முதன்மையானதாக அவர்கள் எடுத்துக் கொண்டது, பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் தமிழர் சாதிய உறவு முறையின் கட்டமைப்பை தகர்த்தெறிவது. இந்த கட்டமைப்பை சின்னா, பின்னமாக உடைப்பதன் மூலம், தமிழனின் அடையாளத்தை வேறடி மண்ணோடு மறைத்து, தங்களை திராவிட போர்வைக்கும் மூடி மறைத்துக் கொண்டும், தமிழர்களென உலகுக்கு பொய்யாக காட்டிக் கொண்டும், தமிழர்கள் மூலமே தமிழர்களுக்கே தலைவராகி ஆட்சி, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

ஆனாலும், கடந்த ஒரு நூற்றாண்டாக திராவிட சக்திகளின் ஆட்சி, அதிகாரம் உச்சாணியில் இருந்த போதிலும், தமிழ்ச் சாதிகளை இதுவரை இவர்களால் ஒழித்து, வெற்றி காண முடியவில்லை. இந்த திராவிட முன்னெடுப்புகளில், தமிழர்களை, திராவிடர் சக்திகள் ஏமாளியாக்க பார்த்த நிலையை நினைத்தால் அனைவருக்கும் சிரிப்புத்தான் ஏற்படுகிறது. தேர்தல் சமயங்களில் சாதி வாரியாக வேட்பாளர்களை தேர்வு செய்வது; பெரும்பாலான திராவிட சக்திகள் தங்களது குடும்ப உறவுகளுக்கு, தங்களது சாதிக்குள்ளேயே திருமணம் செய்து வைப்பதை நாம் அனைவரும் வேடிக்கைப் பார்த்தே வந்திருக்கிறோம். திராவிட சக்திகளின் வெற்றியாக இந்த நிலைப்பாட்டில் காட்ட முடியுமெனில், அது தமிழர்களின் பெயர்களுக்கு பின்னால் தொக்கி நின்ற சாதிய பெயர்களை மட்டும் ஒரளவிற்கு பதிவிட இயலாத நிலையை உருவாக்க முடிந்தது மட்டும் தான்.

ஆனால், இங்கு வாழும் தமிழ் மக்களின் எண்ணம், ‘தமிழ் சாதிகளுக்குள் உள்ள ஏற்றத் தாழ்வற்ற சமச்சீரான சமூக நீதியை’ காண வேண்டும் என்பது தான்.

சமச்சீரும் ஏற்றத்தாழ்வற்ற தமிழர் சாதிய உறவு முறையை ஏற்படுத்த எண்ணாமல், தோற்றுப்போன ஆரிய – திராவிட, வடுகர்கள், ஏன் உறவு முறையான தமிழர் சாதியை சிதைக்க நினைக்க வேண்டும்?

ஏழை, பணக்காரன் என்ற நவீன கால சாதி ஒழிப்பை ஏன் இவர்கள் பேசுவது கிடையாது?

இதில் உள்ள சூச்சுமத்தை தமிழர்கள் நாம் தெளிபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த சூழ்ச்சிக்கு அப்பாவித் தமிழர்கள் மீண்டும் பலிகடா ஆக வேண்டுமா என்பதை எதார்த்தமாக சிந்திக்க வேண்டும்.

உலகத் தமிழர் பேரவையின் இதழான ‘தமிழ் உலகம்’ இதழின் தலையங்கம்…

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: