காவேரி வாரியம் அமைக்க கோரி ம.ஜ.க. வோடு இணைந்து இன்று தொடருந்து (ரயில்) மறியல் போராட்டத்தில் உலகத் தமிழர் பேரவை களமாடும்!

 

காவேரி தமிழகத்துக்கு மட்டும் உரிமையானது அல்ல. வங்கக் கடலுக்கும் உரிமையானதுதான்!

காவேரி தமிழகத்துக்கு மட்டும் உரிமையானது அல்ல. வங்கக் கடலுக்கும் உரிமையானதுதான்!

தமிழர்களில் காவேரி ஆற்று நீர் உரிமைப் போராட்டத்தில் நீதி மன்றம் உத்தரவிட்டும், இந்திய மைய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வராததை கண்டித்தும், அவ்வாரியத்தை உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என கோரி மனிதநேய ஜனநாயக கட்சி (ம.ஜ.க.) இன்று (அக்டோபர் 18) தமிழகத்தின் பல பகுதிகளில் தொடருந்து மறியல் போராட்டம் நடத்துகிறது. ம.ஜ.க.வின் தலைமை இப்போராட்டத்திற்கு ஆதரவு தர கேட்டுக் கொண்டதற்கிணங்க, உலகத் தமிழர் பேரவையும் இப்போராட்டத்தில் இணைந்து கலந்து கொள்கிறது.

தமிழர்களின் காவேரி ஆற்று நீர் உரிமைப் போராட்டத்தில், உரிமையை நிலை நாட்டும் வகையில் ம.ஜ.க.வோடு இணைந்து, உலகத் தமிழர் பேரவையும் இன்று நடைபெறும் தொடருந்து போராட்டத்தில் பங்கு கொள்கிறது. இப்போராட்டம் தமிழகத்தின் கீழ் கண்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெறுகிறது:

– சென்னை- கடற்கரை (பீச்) ஸ்டேஷன்- 4 மணி
– விழுப்புரம் – திண்டிவனம் ரயில் நிலையம்- 4 மணி
– மதுரை- மதுரை ரயில் நிலையம்- 4 மணி
– வேலூர் கிழக்கு- காட்பாடி ரயில் நிலையம்- 4 மணி
– வேலூர் மேற்கு- கண்டோன்மென்ட் ரயில் நிலையம் – 4 மணி
– திருப்பூர்- திருப்பூர் ரயில் நிலையம்- 4 மணி
– தூத்துக்குடி- 2ம் கேட் – 4 மணி
– திருச்சி- மத்திய ரயில் நிலையம்- 3.30மணி
– கும்பகோணம்- ரயில் நிலையம்- 3.30மணி
– கடலூர் (வ)- ஆர்ச் கேட் நெய்வேலி- 10.30மணி
– காரைக்கால்- ரயில் நிலையம்- 11மணி
– திண்டுக்கல் மேற்கு-பழனி ரயில் நிலையம் -11 மணி

சென்னை கடற்கரை (பீச்) தொடருந்து நிலையத்தில் நடைபெறும் போராட்டத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி கலந்து கொள்ள உள்ளார். அதுபோல், உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் காவேரி ஆற்று நீர் உரிமைப் போராட்டத்தில் வாய்ப்புள்ள இடங்கள் பங்கெடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறது.

தலைமை, உலகத் தமிழர் பேரவை
9841688937
www.worldtamilforum.com

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: