வியனரசு சென்னையில் உள்ள உலகத் தமிழர் பேரவை-க்கு நேரில் வருகை!

வியனராசு சென்னையில் உள்ள உலகத் தமிழர் பேரவை-க்கு நேரில் வருகை!

வியனராசு சென்னையில் உள்ள உலகத் தமிழர் பேரவை-க்கு நேரில் வருகை!

தமிழர் கொற்றம் என்ற புதிய கட்சியை நிறுவிய வியனரசு, தமிழ் தேசியத்தில் சுமார் 40 ஆண்டுகளாக பயணித்து வருபவர். எமக்கும் 20 ஆண்டு கால நண்பர். இன்று சென்னையில் உள்ள உலகத் தமிழர் பேரவையின் தலைமையகத்திற்கு நட்பு ரீதியாகவும், மரியாதை நிமித்தமாகவும் வந்து சென்றார். ஆரம்பம் முதலே தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலை போராட்டத்தை போன்ற பல போராட்டங்களை தமிழ் மண்ணணுக்காக நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

தமிழ் தேசியத்தில் முதிர்ச்சி பெற்றிருக்கும் அவர், நாம் தமிழர் சீமான் கட்சியிலிருந்து பிரிந்து வந்ததை நாம் அறிவோம். ஆனால், அவர் திராவிடத்தை காப்பாற்ற போராடி வரும் வைகோ-வுடனான சந்திப்பு புகைப்படம் அன்மையில் வெளியாகியிருந்ததை பார்க்க முடிந்தது. அவரிடமே நாம் இது பற்றி வினாவிய போது, தான் நெல்லையில் ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது, அதே விடுதியில் வைகோவின் கூட்டம் நடத்ததாகவும், இவருடைய அறைக்கே வைகோ சொல்லாமல் கொள்ளாமல் நேரில் வந்ததாகவும், அதை தான்னால் தடுக்க இயலாமல், வந்தவரை வரவேற்று பொன்னாடை போத்தி அரை மணி நேரம் ஸ்டெரிலைட் ஆலை குறித்து மட்டுமே பேசியதாகவும் தெரிவித்தார்.

நாம் இனி வருங்காலத்திலும் தமிழ் தேசியத்திற்கான ஆதரவு மட்டுமே கொடுக்க வேண்டும் என்று கேட்டத்தற்கு, தனது கட்சியில் உயர்மட்ட குழு எடுக்கும் முடிவிற்கே தான் கட்டுப்படப் போவதாக சொல்லி சென்றார்.

முன்னதாக உலகத் தமிழர் பேரவை- க்கு வந்தபோது, பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களால் வியனரசு-வுக்கு மரியாதை நிமித்தமாக பொன்னாடை போர்த்தி புத்தகங்களை நினைவு பரிசாக வழங்கினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: