தமிழ் மன்னன் இராசராசனின் பரம்பரை என முழங்கும் நமது தமிழ் இனக்குழுவினர் உடனடியாக செய்ய வேண்டிய செயல்பாடு இவை! – உலகத் தமிழர் பேரவை

தமிழ் மன்னன் இராசராசனின் பரம்பரை என முழங்கும் நமது தமிழ் இனக்குழுவினர் உடனடியாக செய்ய வேண்டிய செயல்பாடு இவை!

தமிழ் மன்னன் இராசராசனின் பரம்பரை என முழங்கும் நமது தமிழ் இனக்குழுவினர் உடனடியாக செய்ய வேண்டிய செயல்பாடு இவை!

1000 ஆண்டுகளுக்கு முன்பு இராசராசன் நமது தமிழர் இனக்குழுவின் அங்கம். அவரின் அதிமுக்கியமான அடையாளமாக இப்பொழுதும் இருந்து வருவது தஞ்சை பெரிய கோயில்.

தமிழ் மன்னர்களை ஏமாற்றி ஆட்சியை பறித்து (இளித்தவாயன் என்பது வேறு…), 17ம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்க மன்னர்களின் ஆட்சி தஞ்சையில் முடிவுற்றும், அது மராத்தியர்களின் கைகளுக்கு செல்கிறது. பின்னர் 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் தஞ்சை வந்து, மராத்தியர்கள் ஆங்கிலேயனிடம் கப்பம் கட்டும் அடிமைகளாக இருந்து வந்ததும், கடைசியாக 1947-ல் இந்திய சுதந்திரம் பெற்ற பின்பு, ஏதோ ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் டெல்லி இந்திய மைய அரசு ஆங்கிலேய அடிமைகளான மராத்தியர்களுக்கே தமிழனின் கோயிலான தஞ்சை பெரிய கோயிலை இன்று வரை தமிழர்களின் அன்னிய நிர்வாகத்திற்கு கீழ் வைத்துக் கொண்டிருப்பதை, நமது ஆண்ட தமிழ் பரம்பரை மக்களுக்கு தெரியாதா?

இப்பொழுது நாம் செய்ய வேண்டியது, தஞ்சையை மையமாகக் கொண்டு ஆண்ட தமிழ் மன்னன் இராசராசன் நமக்கு அடையாளமாக விட்டு சென்ற உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரிய கோயிலிலிருந்து அன்னியர்களான மராத்திய சரபோஜிகளின் நிர்வாகத்திலிருந்து வெளியேற்ற வேண்டியதுதான் முதன்மையானது.

அன்மைக்காலமாக தமிழக கோயில்களின் வரலாற்று சின்னங்கள், வடநாட்டான் திருடி, அதை பல கோடிகளுக்கு வெளிநாடுகளில் விற்று வருவது அன்றாடம் செய்தித்தாள்களில் வருவதை படிக்க முடிகிறது. இன்று வரை அன்னியர்களான மராத்தியர்களின் நிர்வாகத்திற்கு கீழ் உள்ள தமிழனின் கோயிலான தஞ்சை பெரிய கோயிலில் உள்ள சிலைகள் மாற்றப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆதலால், இந்த திருட்டில், தஞ்சை பெரிய கோயில் புராதான சின்னங்கள் உண்மையானவையா என்பதை இப்பொழுதே ஆராயப்பட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

இதை விடுத்து வெறுமானே ஆண்ட பரம்பரை என கூவிக் கொண்டு நமது தமிழ் இன மக்கள் திரிவதை பிறர் பார்த்தால், நம்மைப் பார்த்து கேலியாக சிரிக்கத்தான் செய்வார்கள் என்பதை மறக்கலாகாது.

எனவே, உடனடியாக நமது ஆண்ட சோழர் பரம்பரை இன தமிழ் மக்கள் ஒன்றிணைந்து, நமது பாரம்பரிய சின்னமாக தஞ்சை தமிழ் மன்னன் இராசராசன் நமக்காக கட்டி வைத்து சென்ற தஞ்சை பெரிய கோயிலை அன்னியர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாக கருதி அதற்கான வேளைகளை முதலில் முன்னெடுப்போம் என்பதையே உலகத் தமிழர் பேரவை இன்று வலியுறுத்துகிறது.

  • அக்னி, ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பேரவை
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: