“உலகத் தமிழர் பேரவை” என்ற பெயரில் போலியாக உறுப்பினர் சேர்க்கும் இணையம்!

எனது “உலகத் தமிழர் பேரவை” என்ற பெயரில் +91-9003327779 (பெயர் : வே.ரா.பா.சுகுமார் பிள்ளை) என்பவர் எமது வாட்ஸ்அப் குழுவில், உலகத் தமிழர் பேரவையில் உறுப்பினராக விரும்புபவர்கள் அந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதியலாம் என சென்ற வெள்ளியன்று பதிவிட்டுள்ளார்.இது ஒரு போலியான நபரால் பதிவிடப்பட்டுள்ளது என்பதையும், இன்று (12.01.2022) மாலைக்குள் இந்த பதிவிட்ட நபர் இவரது செயலுக்காக “எழுத்துபூர்வமாக மன்னிப்பு” கோராவிட்டால், உலகத் தமிழர் பேரவையின் சார்பில் சென்னை பெருநகர காவல் துறை ஆணையாளருக்கு புகார் கொடுக்க முடிவெடுத்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நடவடிக்கையின் பின் விளைவுகள் மிகவும் மோசமாகவும், வருத்தப்படும் வகையிலும் இருக்கும் என்பதை இதன் மூலம் எச்சரிக்கை செய்கிறோம்.

குறிப்பிட்ட  நபருக்கு தனிப்பட்ட வாட்ஸ்அப் செய்தியையும், தொலைப்பேசி வாயிலாகவும் எச்சரிக்கை செய்யவும் உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பிட்ட அந்த நபர், எம்மை தொடர்பு கொள்ள நினைத்தால், +91-7904576115 என்ன எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அக்னி சுப்ரமணியம்
தலைவர்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: