தமிழீழம் அமைவதற்கான அகச்சூழல் அல்லது புறச்சூழல் எதார்தத்தில் இன்றியமையாதது!

தமிழீழம் அமைவதற்கான அகச்சூழல் அல்லது புறச்சூழல் எதார்தத்தில் இன்றியமையாதது!

தமிழீழம் அமைவதற்கான அகச்சூழல் அல்லது புறச்சூழல் எதார்தத்தில் இன்றியமையாதது!

தமிழீழக் கனவில் தமிழ்நாட்டில் ஒரு சாரார் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. அது நடந்தால் எமக்கு மகிழ்ச்சியே. நடக்க வேண்டும் என்ற ஆசையாகவும் உள்ளது.

ஆனால், அன்மையில் நடைபெற்ற மாநாட்டில், மாப்பிள்ளை இல்லாமலேயே நடைபெற்ற திருமணம் போல அமைந்திருந்ததுதான் வியப்பு. தமிழீழம் உருவாகுவதற்கான அகச்சூழல் அல்லது புறச்சூழல் அல்லது அதற்கான சாத்தியக் கூறுகள் இப்போது இருக்கிறதா? என்பதை எதார்த்தில் பார்க்க வேண்டியதாக உள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


தற்போது இலங்கையில் ஒரு புதிய அரசியல் யாப்பு எழுதும் முயற்சி நடைபெற்று வருகிறதை அறிந்திருக்க வேண்டும். அந்த செயல்பாட்டில் 50 விழுக்காடு முயற்சியும் முடிந்து விட்டது நிலையுள்ளது. இதனிடையே ஒரு இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அது பற்றி இலங்கை நாடாளுமன்றத்தில் 5 நாட்களாக விவாதிக்கப்பட்டது. மீண்டும் வழி காட்டுக் குழுவில் விவாதிக்கப்பட்டு ஒரு (யாப்பு) வரைவு எழுதப்பட வேண்டும். இலங்கை அரசியலில் ஆளும் கட்சிகளுக்கு இடையே கடந்த இரண்டு மாத காலமாக நடைபெறும் குழப்பம் காரணமாக இடைக்கால அறிக்கை பற்றிய விவாதம் தேக்க நிலையில் தற்போது உள்ளாகியுள்ளது.

ஒன்றுபட்ட இலங்கையில் தமிழ் பேசும் மக்களது மரபு வழிப் பிரதேசத்தில் தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் ஒரு சமஷ்டிக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே ஈழ மக்களால் தேர்வு செய்யப்பட்ட இன்றைய தமிழ்த் தலைவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இது ஒரு குறைந்த பட்ச கோரிக்கை. இதற்கே தீவிர சிங்கள – பவுத்த தேசியவாதிகளிடமிருந்து இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் இப்படியான தீவிர சிங்கள – பவுத்த தேசியவாதிகளது கைதான் இன்னும் ஓங்கியிருக்கிறது. இப்போது வரையப்பட்டுள்ள புதிய யாப்பு முயற்சி தோல்வியுற்றால் தனித் தமிழீழம் கேட்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம் என தமிழ்த் தலைவர்கள் மறைமுகமாக எச்சரித்தும் வருகிறார்கள்.

இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளது ஆதரவு எமக்குத் தேவை. இந்த நாடுகளது ஆதரவு இல்லாது ஒரு அடிகூட முன்னுக்கு எடுத்து வைக்க முடியாது. எனவே தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழீழத்துக்கு குரல் கொடுப்போர் இந்தியாவையும், அமெரிக்காவையும் பகைக்கக் கூடாது. அந்த நாடுகளைத் தங்கள் பக்கம் வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். புலிகளின் ஆயுதப் போராட்டம் தோற்றதற்குக் காரணம் அவர்கள் பூகோள அரசியல் யதார்த்தத்தை தெரிந்து வைத்திருக்கவில்லை என்பதுதான். உலகில் உள்ள 31 நாடுகள் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்திருந்தன.

1991 இல் இந்தியாவை புலிகள் பகைத்துக் கொண்டார்கள். பங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற முழக்கத்தின் ஊடாக சிறிலங்காவும் 21 உலக நாடுகளும் கைகோர்த்து விடுதலைப் புலிகளை தோற்கடித்து விட்டன.

இப்போது இலங்கையில் தமிழர் தரப்பு ஒஸ்லோ பிரகடனத்தில் வரையப்பட்ட ஒரு தீர்வைத்தான் கேட்டிருக்கிறது. அது தோல்வியுற்றால் நாங்கள் தனிநாடு அமைக்க உலக நாடுகளின் உதவியை நாடுவோம். வரலாற்று ரீதியாக இலங்கையின் வடக்கு – கிழக்குப் பகுதியை (யாழ்ப்பாண இராச்சியம்) குறைந்தது நான்கு நூற்றாண்டுகளாவது (கிபி 1213 – 1619) தமிழ் அரசர்கள் ஆண்டிருக்கிறார்கள். போர்க்களத்தில்தான் நாட்டை அந்நியரிடம் பறி கொடுத்தார்கள்.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான். ஆனால் அப்படிக் கூற சாட்சியம் போதவில்லை என ஐ.நா.மனித உரிமைப் பேரவை சொல்லுகிறது. அதற்கான சாட்சியம் கிடைக்கும் போது அதுபற்றி பரிசீலனை செய்யலாம் என பேரவையின் ஆணையரது ஊடகப் பேச்சாளர் 2015 ஆம் ஆண்டு தெரிவித்தார். இதுதான் இன்றைய எதார்த்தம்.

உதவி செய்கிறோம் என நினைத்து எமது பக்கத்தில் உள்ள அதிதீவிர தமிழ்த் தேசியம் பேசுவோர் இலங்கைத் தமிழர்களது அரசியல் போராட்டத்துக்கு இடையூறாக இருந்தது விடக் கூடாது.

 – வேலுபிள்ளை தங்கவேலு, கனடா

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: