நாம் தமிழர் கட்சியில் தெலுங்கில் தேர்தல் பிரச்சாரமாம்! நாமும் பார்த்தோம் அந்த கூத்தை… !

நாம் தமிழர் கட்சியில் தெலுங்கில் தேர்தல் பிரச்சாரமாம்! நாமும் பார்த்தோம் அந்த கூத்தை... !

நாம் தமிழர் கட்சியில் தெலுங்கில் தேர்தல் பிரச்சாரமாம்! நாமும் பார்த்தோம் அந்த கூத்தை… !

தெலுங்கில் பிரச்சாரம் செய்தால், தெலுங்கன் நமக்கு ஓட்டு போட்டிருவானாம். நாமும் வெற்றி பெற்ற விடுவோமாம். என்னெ ஒரு ஞானம்.

எல்லா மாற்று மொழியினரும் ஆரம்பத்திலே நம் தமிழருக்காக இப்படித்தான் பொங்குவானுக…

ஏன், விஜயகாந்த் கூட இப்படித்தான் எல்லா படத்திலேயும், நான் ‘தமிழன்டா’ என்றவாறு வந்தார். கட்சி ஆரம்பித்த பின்னர் மனவாடுகளை கூட வைத்து கொள்கிறார். இப்ப நாம் யார் போய் இதை கேட்க முடியும்….

திராவிட கட்சிகள் ஆரம்பித்தது முதல் இப்படித்தான் முகமுடி தரித்து வந்த பல பேரை நாம் பார்த்ததுக் கொண்டிருக்கிறோம். இப்ப காலத்திற்கேற்ப அவர்களுடைய மேடை பிரச்சார உத்தியை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

நாம் தமிழர் கட்சியில் தமிழகத்திற்குள் உள்ள ஆர்.கே.நகரில் தெலுங்கில் தேர்தல் பிரச்சாரம் என்பதை என்ன காரணமாக இருப்பினும் ஏற்றுக் கொள்ள இயலாதது. இதனால் நமது உலகத் தமிழர் பேரவை – யின் ஆதரவு தமிழர்களுக்கு இல்லையென்பதாக எண்ண வேண்டியதில்லை.

அவனுகெல்லாம் எப்பொழுதும் தெளிவாத்தான் இருக்கானுக. நாம் தான் புரிஞ்சிக்க மாட்டீங்கிறோம்.

அதனாலே, விழித்துக் கொள் தமிழா!!!

அக்னி
ஒருங்கிணைப்பாளர்
உலகத் தமிழர் பேரவை

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: