நடிகரும் தமிழக மேனாள் முதல்வருமான திரு. எம்.ஜி.ஆர். அவர்களின் வளர்ப்பு மகள் தான் டாக்டர் லதா ராஜேந்திரன். திருமதி.லதா ராஜேந்திரன், திரு. எம்.ஜி.ஆர். அவர்களின் மனைவியான திருமதி. ஜானகி அவர்களின் நெருங்கிய உறவினராவார்.
திரு. எம்.ஜி.ஆர். மறைவிற்கு பின், அவரது வாரிசாக இருந்து வருபவர் டாக்டர் லதா ராஜேந்திரன். தற்போது அவர் சென்னை அடையாற்றில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி கலை அறிவியல் கல்லூரியின் நிறுவனராகவும், இன்னும் இதுபோன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களின் நிறுவனராகவும் இருந்து வருகிறார். டாக்டர் லதா ராஜேந்திரன் அவர்களின் அன்பு மகனும் வழக்குரைஞருமான திரு. குமார் ராஜேந்திரன் அவர்கள், தாயாரின் கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றார்.
டாக்டர் லதா ராஜேந்திரன் மற்றும் அவரது மகனும் வழக்குரைஞருமான திரு. குமார் ராஜேந்திரன் ஆகியோர்களை இன்று (10-10-2019) மரியாதை நிமித்தம் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சென்னையில் சந்தித்து, திரு. எம்.ஜி.ஆர் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து மகிழ்ந்தனர்.