இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை நிறுவ தமிழகத்தில் முதல் கலந்துரையாடல்!

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் தமிழ்த்துறையை நிறுவ தமிழகத்தில் முதல் கலந்துரையாடல்!

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் தமிழ்த்துறையை நிறுவ தமிழகத்தில் முதல் கலந்துரையாடல்!

உலகத் தமிழர்கள் அனைவரையும் பெருமைப்படுத்தும் விதமாக, இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை உருவாக்க அனுமதி கிடைத்துள்ளது. தடங்களின்றி தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை நடத்த 10 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் வைப்பு நிதி தேவைப்படுகிறது (100 கோடி இந்திய பணம்). இந்த வைப்பு நிதியை திரட்டிவிட்டால், ஆயிரமாயிரம் ஆண்டுகள் தமிழை இலண்டனில் படிப்பிக்க இந்த நிதி போதுமானதாக இருக்கப் போகிறது.

london_tamil_chair_savera_07012019_3இதற்காக இலண்டனிலிருந்து இலண்டன் தமிழ்த்துறை ஒருங்கிணைப்புக் குழு-வின் முக்கிய நபராக செயல்பட்டு வரும் ஐயா திரு. சிவா பிள்ளை அவர்கள் கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுக்க பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரை சந்தித்து வருகிறார்.

london_tamil_chair_savera_07012019_2தமிழக பயணத்தின் இறுதி நிகழ்வாக சென்னை-யில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியான ஹோட்டல் சவேராவில் (Hotel Savera)  இன்று 07-01-2019 மாலை கலந்துரையாடல் ஒன்று நிகழ்த்தப்பட்டது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை திரு. சிவா பிள்ளை ஒருங்கிணைக்க, சென்னை பெருநகர காவல்துறையின் இணை ஆணையர் திரு. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்., உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் பேரா. முனைவர் கு.சிதம்பரம், செம்புலம் காலாண்டிதழ் ஆசிரியர் முனைவர் சு.சதாசிவம், திருமதி. மு.கனகலட்சுமி, திரு. சி.பெரியசாமி, கணியம் அறக்கட்டளையின் திரு. கார்க்கி, திரு. கலீல் காகீர், திரு. அன்வர், டிஸ்கவரி புக் பேலஸின் உரிமையாளர் திரு. மு.வேடியப்பன், உலகத் தமிழர் பேரவையின் தலைமை நிலைய செயற்பாட்டாளர் செல்வி. வாசுகி ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: