கீழடி என்பது ‘தமிழர் நாகரிகம்’ மட்டுமே என்று உலகுக்கு பறைசாற்றிய வழக்கறிஞர் கனிமொழி மதி அவர்களை உலகத் தமிழர் பேரவை நேரில் பாராட்டியது!

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி அவர்கள்

“கீழடியில் நடைபெறவுள்ள 4-ம் கட்ட அகழாய்வுப் பணியை காலதாமதம் செய்யக்கூடாது, கீழடியின் அகழ்வாராய்ச்சி கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவை மீண்டும் அங்கேயே பணியமர்த்த வேண்டும், கீழடியில் கண்டெக்கப்பட்ட பழமையான பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும்” ஆகிய முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து வழக்கறிஞர் கனிமொழி மதி அவர்கள், மதுரை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு கீழடி அகழாய்வுக்கு ஒரு திருப்புமுனை ஆனதைப் பாராட்டி இன்று (23-10-2019) உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி, புத்தகம் பரிசளித்து வாழ்த்திப் பாராட்டினார்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: