காவேரி வாரியம் அமைக்க கோரி ம.ஜ.க. வோடு – உலகத் தமிழர் பேரவையும் இணைந்த மறியல் போராட்டத்தின் விளைவாக சென்னை, கடற்கரை (பீச்) தொடர்வண்டி நிலையம் அசைவற்று நின்றது!

காவேரி வாரியம் அமைக்க கோரி ம.ஜ.க. வோடு - உலகத் தமிழர் பேரவையும் இணைந்த மறியல் போராட்டத்தின் விளைவாக சென்னை, கடற்கரை (பீச்) தொடர்வண்டி நிலையம் அசைவற்று நின்றது!

காவேரி வாரியம் அமைக்க கோரி ம.ஜ.க. வோடு – உலகத் தமிழர் பேரவையும் இணைந்த மறியல் போராட்டத்தின் விளைவாக சென்னை, கடற்கரை (பீச்) தொடர்வண்டி நிலையம் அசைவற்று நின்றது!

இந்திய மத்திய அரசை கண்டித்த காவேரி வாரியம் அமைக்க கோரி ம.ஜ.க. வோடு – உலகத் தமிழர் பேரவையின் மறியல் போராட்டத்தின் விளைவாக இன்று சென்னை, கடற்கரை (பீச்) தொடர்வண்டி நிலையம் மாலை சுமார் 5 மணிக்கு 20 நிமிடம் அசைவற்று நின்றது.

தமிழர்களில் காவேரி ஆற்று நீர் உரிமைப் போராட்டத்தில் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும், இந்திய மைய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வராததை கண்டித்தும், அவ்வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிகையோடு, மனிதநேய ஜனநாயக கட்சி (ம.ஜ.க.)யும், உலகத் தமிழர் பேரவையும் இன்று (அக்டோபர் 18) மாலை சுமார் 5 மணிக்கு சென்னை, கடற்கரை (பீச்) தொடர்வண்டி நிலையத்தினுள் மறியலில் ஈடுபட்டனர்.

mjk-wtf-181020161

மனிதநேய ஜனநாயக கட்சி (ம.ஜ.க.)-வின் முக்கிய தலைவரான திரு. ஹாருண் ரசீத் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் உலகத் தமிழர் பேரவையின் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி மற்றும் அவரது தோழர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சி (ம.ஜ.க.)-வின் தலைமையில் தொடர்வண்டி நிலையங்களில் மறியல் போராட்டம் நடத்தது குறிப்பட வேண்டிய ஒன்று.

சென்னை கடற்கரை (பீச்) தொடர்வண்டி நிலையத்தில் காவல்துறையினர் பலத்த பாததுகாப்பும், இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து இருந்ததையும் மீறி சுமார் 250க்கும் மேற்பட்டோர் தடுப்புகளை தாண்டி உள்ளே சென்று, புறப்பட தயாராக இருந்த தொடர்வண்டியை தடுத்து இந்திய மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை 20 நிமிடங்கள் பதிவு செய்தனர். பொது மக்களின் நலன் கருதி, போராட்டத்தை விலக்கி கொண்ட பின்னர், தமிழக காவல்துறையினர் மறியல் செய்த அனைவரையும் கைது செய்து, சென்னை இராயபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்பத்தில் அடைத்தனர்.

தலைமையகம், உலகத் தமிழர் பேரவை
9841688937
www.worldtamilforum.com

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: