மேனாள் வட – மாகாண பெண்கள் நலத்துறை அமைச்சர் திருமிகு. ஆனந்தி சசிதரனுடன் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!

மேனாள் வட – மாகாண பெண்கள் நலத்துறை அமைச்சர் திருமிகு. ஆனந்தி சசிதரனுடன் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!

மேனாள் வட – மாகாண பெண்கள் நலத்துறை அமைச்சர் திருமிகு. ஆனந்தி சசிதரன் அவர்கள் சென்னைக்கு இன்று (28-08-2019) வருகை தந்துள்ளார். அவரை மரியதை நிமித்தம் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்தித்து ஈழ நிலை குறித்து உரையாடினார். அவ்வேளையில் தமிழக மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் எம்.ஜி.ஆரின் நெருங்கிய தோழருமான திரு. மரூர் என். தர்மலிங்கம், பேரா. டாம் மனோகர், வணிக நிறுவனத்தின் தலைவர் திரு. ரீத்தீஸ் மற்றும் ஈழம் ரவி உடனிருந்தனர்.

(ஆசிரியராக இருந்த அனந்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் திருக்கோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும் வேலாயுதம் சசிதரனின் மனைவி ஆவார். எழிலன் 2009 மே மாதத்தில் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து இலங்கை ஆயுதப் படைகளிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனார். இவர் சரணடைந்ததை இலங்கை அரசு மறுத்து வருகிறது. ஆனாலும், தனது கணவர் இலங்கை அரசின் காவலில் இன்னமும் உள்ளார் என அனந்தி நம்புகிறார், அவரது விடுதலைக்காக பரந்த அளவில் குரல் கொடுத்து வருகிறார். ஈழப்போரில் காணாமல் போனோர் மற்றும் விதவைகளின் குடும்பங்களுக்காக அனந்தி குரல் கொடுத்து வருகிறார். தமிழ் தேசிய உணர்வாளர்களை ஒன்றிணைக்க, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் கட்சியின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார்.)

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: