ஜெர்மனியில் தமிழாசிரியை ஒருவர் கொரோனா தொற்றிற்கு பலி!

ஜெர்மனின் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள தமிழாலயத்தின் உதவி நிர்வாகியும், தமிழாசிரியையாக பணியாற்றிய திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம் அவர்கள் இன்று 24.04.2020 வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு பலியானார்.

இரு வாரங்களாக கொடிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

இவருடைய இழப்பினால் தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை உலகத் தமிழர் பேரவை தெரிவித்துக் கொள்கிறது.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

#Covid19 #CoronaTamils

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: