போர்க் குற்றம் : இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் அவையில் தொடரும் நெருக்கடி …!

போர்க் குற்றம் : இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் அவையில் தொடரும் நெருக்கடி ...!

போர்க் குற்றம் : இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் அவையில் தொடரும் நெருக்கடி …!

இலங்கை குறித்து இன்னும் உறுதியான தீர்மானம் ஒன்றை கொண்டு வரவேண்டும் என சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவா பணிப்பாளர் ஜோன் பிஷர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

இதன்படி, இலங்கையில் நல்லிணக்கம், நீதி, மறுசீரமைப்பு மற்றும் வாக்குறுதிகள் என்பவற்றை மெய்ப்பிப்பதற்கு இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை குறித்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரையில், சர்வதேசத்தின் கண்காணிப்பு தொடர வேண்டும்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கூட்டத் தொடரில் உறுதியானதும், காத்திரமானதுமான தீர்மானம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என ஜோன் பிஷர் தெரிவித்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இதனிடையே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரப் போவதாக, அரசாங்கம் உறுதிப் படுத்தியுள்ளது.

ஜெனிவா சென்றுள்ள பிரதிநிதிகள் குழுவில் இடம் பெற்றுள்ள நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலர் மனோ தித்தவெல தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தைப் பெற முடியும் என்று இலங்கை நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கு காலஅவகாசம் அளிக்கும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில், புதிய தீர்மானம் ஒன்று அமெரிக்கா, பிரித்தானியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் இணை அனுசரணையுடன் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஜெனிவாவில் நடந்த பக்க அமர்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட மனோ தித்தவெல, நிலங்கள் விடுவிப்பை துரித்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: