பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக இல்-டு-பிரான்ஸ் மாறியுள்ள நிலையில், அப்பிராந்தியத்தின் Seine-Saint-Denis மாவட்டமே பாதிப்பினைச் சந்தித்து வருகின்றது.
தமிழர்கள் அதிகம் வாழுகின்ற இல்-டு-பிரான்ஸ் மாகாணத்தில் 93 பிராந்தியத்திலேயே அதிகளவான வாழ்ந்து வருகின்றனர்.
கொரோனாவுக்கு இதுவரை இங்கு இரையாகிய தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இப்பகுதியினைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். பலர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சிலர் குணமடைந்துள்ளனர்.
இல்-டு-பிரான்சில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் அண்ணளவாக 63% வீதமானவை இந்த மாவட்டத்திலேயே இடம் பெற்றுள்ளதாக சுகாதாரத்துறையின் அறிக்கையின் புள்ளிவிபரம் எடுத்துக்காட்டுக்கின்றது.
மார்ச் 24ம் திகதி இப்பகுதியில் வேகமெடுக்கத் தொடங்கிய வைரஸ் தொற்று இந்த இடத்தில் நாளுக்கு நாள் உயிர் பலியினை ஏற்படுத்தி வருவதாக லு பரிசியன் பத்திரிகை தெரிவிக்கின்றது.
இதுவரை 5 மேற்பட்ட தமிழர்கள் கொரோனா தொற்று நோயால் பிரான்ஸ் நாட்டில் மட்டும் மரணமடைந்துள்ளனர் என்ற வேதனையான் செய்திகள் வருகின்றன.
அக்னி சுப்ரமணியம்
தலைவர்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com