பிரான்சில் இன்று கொரோனா தாக்கி இளம் தமிழ் பெண் மரணம்!

இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தமிழ் பெண், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் இன்று காலை உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் நீராவியடிப் பகுதியைச் சேர்ந்த உமா சுதன் சாம்பவி (வயது-31) என்பவரே கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்தார். கொரோனா தொற்று ஏற்பட்டு 14 நாட்கள் கடந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாய், தந்தை இழந்த நிலையில், திருமணம் செய்து பிரான்ஸ் Créteil பகுதியில் வசித்து வந்த நிலையிலேயேஉமா சுதன் சாம்பவி கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உமா சுதன் சாம்பவி தெய்வ பக்தி நிறைந்து காணப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைக் காலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் இளவயது மரணங்களும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அக்னி சுப்ரமணியம்
தலைவர்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: