ஈழத் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரிக்கு மீண்டும் பணி!

ஈழத் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரிக்கு மீண்டும் பணி!

ஈழத் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரிக்கு மீண்டும் பணி!

பிரிட்டனில் இலங்கை தமிழர்களுக்கு சைகை மூலம் கொலை மிரட்டல் விடுத்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இலங்கை ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னான்டோவுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இலங்கை சுதந்திர தினத்தையொட்டி, பிரிட்டனில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது, இலங்கைப் போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பிரிட்டனில் வசித்துவரும் இலங்கைத் தமிழர்கள் பலர் தூதரகம் முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இலங்கை தூதரக ராணுவப் பாதுகாப்பு ஆலோசகர் பிரியங்க பெர்னான்டோ, தமிழர்களைப் பார்த்து ‘கழுத்தை அறுத்து விடுவேன்’ என்பதுபோல சைகை காட்டினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனிடையே, பெர்னான்டோ சைகை காண்பித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அவரை பணி நீக்கம் செய்யக் கோரி, பிரிட்டன் அரசுக்கு இலங்கை வம்சாவளி எம்.பி.க் கள் கடிதம் எழுதினர். இதையடுத்து பெர்னான்டோவை பணியிடை நீக்கம் செய்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவின் பேரில் பிரியங்க பெர்னான்டோவுக்கு புதன்கிழமை மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டன் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அடுத்த நாளே பெர்னான்டோவுக்கு பணி வழங்கப்பட்டிருப்பது இலங்கை தமிழர்களையும், புலம் பெயர்ந்து இங்கிலாந்தில் வாழும் தமிழர்களையும் கடும் அதிர்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக, விடுதலைப் புலிகளுடனான இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போது அந்நாட்டு ராணுவத்தில் பணியாற்றிய பிரியங்க பெர்னான்டோ பல்வேறு போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: