இலங்கையிடம் சலுகைகள் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஏமாற்றிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை!

இலங்கை அரசின் ஆதரவால் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை!

இலங்கை அரசின் ஆதரவால் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை!

இலங்கையிடம் சலுகைகள் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஏமாற்றிய வகையில் மாட்டிக் கொண்ட வட அயர்லாந்தைச் சேர்ந்த சனநாயக தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவர் இயன் பேர்ஸ்லி (Ian Richard Kyle Paisley) – வுக்கு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கு பெற தடை விதிக்கப்பட்டு பதவியும் இழக்கும் நிலை உருவாகியுள்ளது. பதவி போவதை அறிந்து, கண்ணீர் விட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் இயன் பேர்ஸ்லி.

மார்ச் 2014ம் ஆண்டின் போது ஜ.நா மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவிற்கு எதிரான பிரேரணைகள் கொண்டு வரப்பட்டு, அதில் இருந்து பிரித்தானியாவை பின்வாங்க வைக்கும் நோக்கில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தம் வலையில் சிறீலங்காவின் அன்றைய மகிந்த அரசு முயன்றது அனைவரும் அறிந்த ஒன்று. இலங்கை அரசின் அந்த சூழ்ச்சியின் மாட்டிக் கொண்டவர்களில் ஒருவர் தான் வட அயர்லாந்தைச் சேர்ந்த சனநாயக தொழிலாளர் கட்சியின் 50 வயது நிரம்பிய முக்கிய தலைவர் இயன் பேர்ஸ்லி.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


இதற்காக 2013ம் ஆண்டு இவர் குடும்பமாக இரண்டு தடவைகள் சிறீலங்காவிற்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்தார். முதல் தடவை ஏப்ரல் 2013 இலும் இரண்டாம் தடவை ஜூலை 2013யில் குடும்பமாக சென்று வந்தார். இரு தடவைகளும் முதல் தர விமான இருக்கைப் பயணங்கள் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கல் என இவர்களின் அனைத்து பயணச் செலவுகளையும் சிறீலங்கா அரசே பொறுப்பேற்றுக் கொண்டது. அச்செலவு 50 ஆயிரம் பிரித்தானிய பவுண்டுகளில் இருந்து ஒரு லட்சம் பவுண்டுகள் வரை இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இது சிறீலங்கா பணத்தில் 1 கோடியே 4 லட்சத்தில் இருந்து 2 கோடியே 8 லட்சம் வரையாகும்.

இதற்கு பின்னரான காலப்பகுதியில் அதாவது 2013 நவம்பர் கடைசிப் பகுதியில் அன்றைய பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் சிறீலங்கா பயணம் செய்து யாழ்ப்பாணம் சென்றதும் போர் குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெற வேண்டும் எனவும் சிறீலங்காவில் வைத்து வலியுறுத்தியிருந்தமை உங்களுக்கு நினைவிருக்கலாம். பின்னர் 2014 மார்ச் ஜெனிவா கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மார்ச் 19ஆம் நாள் ஜெனிவா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் எனக் கேட்டு அன்றைய பிரதமர் டேவிட் கமரனுக்கு பேர்ஸ்லி கடிதம் எழுதியுள்ளார்.

இயன் பேர்ஸ்லியின் அவ்விடயங்களை கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் பிரித்தானியப் பத்திரிகை டெய்லி ரெலிகிராப் ஆதார பூர்வமாக வெளியிட்டது. இவரது செயற்பாடு பிரித்தானிய நாடாளுமன்ற நடைமுறையை மீறும் செயலாகும். தான் தவறு இழைக்கவில்லை எனவும் விசாரணைக்கு தான் தயார் என்றும் பேர்ஸ்லி அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற நாடாளுமன்ற விசாரணைகளில் முடிவே யூலை 18, 2018இல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இவர் குற்றவாளியாக கண்டறியப்பட்டு அதிகபட்ச தண்டனையாக 30 நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி புதிய பாராளுமன்றத்தில் 10 அமர்வுகளுக்கு மேல் ஒருவர் நாடாளுமன்ற அமர்வுகளில் இருந்து தள்ளி வைக்கப்பட்டால் இவரது தொகுதி வாக்காளர்களில் 10 சதவீதமானோர் இவரை மீளப் பெறவேண்டும் என்ற கோரியோடடு ஒரு மனுவில் கையொப்பம் இட்டு கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் இவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பதுடன் இவர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும். இடைத்தேர்தலுக்கான வேளையில் ஏனைய கட்சிகள் உடனடியாக இறங்கியுள்ளதால் இவர் பதவியை இழக்கும் நிலை தோன்றியுள்ளது.

இவர் மகிந்த அரசால் பணிக்கு அமர்த்தப்பட்டாலும் தற்போதை ரணில் அரசின் கையாளாகவும் இவர் செயற்பட்டு வந்துள்ளதாகவே தெரிகிறது. கடந்த ஆண்டு ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதும் இவர் சார்ந்த வட-அயர்லாந்து மற்றும் சிறீலங்கா வர்த்தக உடன்பாடுகள் குறித்து தான் சிறீலங்காவின் பிரித்தானிய தூதர் அமரி விஜயவர்தனாவுடள் பேசியதாக அவருடன் எடுத்த படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தார். இந்த வகை அச்சுறுத்தலாகவே இப்பிரித்தானிய ஒழுங்கு நடவடிக்கை அரங்கேறியிருக்கிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: