இங்கிலாந்து ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜனுக்கு வாய்ப்பு?- பல்வேறு போட்டியாளர்கள் மத்தியில் முன்னணி!

இங்கிலாந்து ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜனுக்கு வாய்ப்பு?- பல்வேறு போட்டியாளர்கள் மத்தியில் முன்னணி!

இங்கிலாந்து ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜனுக்கு வாய்ப்பு?- பல்வேறு போட்டியாளர்கள் மத்தியில் முன்னணி!

இங்கிலாந்து ரிசர்வ் வங்கியின் கவர்னராக, இந்தியாவைச் சேர்ந்தவரும், முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவருமான ரகுராம் ராஜன் தேர்வு செய்ய அதிகமான வாய்ப்புகள் உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பேங்க் ஆப் இங்கிலாந்து அடுத்த கவர்னரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இருக்கும் நிலையில் உலகப் பொருளாதார வல்லுநர்கள் பட்டியலில் ரகுராம் ராஜன் பெயர் தீவிராக பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இங்கிலாந்து ரிசர்வ் வங்கியின் கவர்னராக தற்போது பணியில் இருக்கும் மார்க் கார்னேவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிகிறது. இதனால், அடுத்த ரிசர்வ்வங்கி கவர்னரை அடையாளம் கண்டு, தேர்வு செய்யும் பணியை அந்நாட்டு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதில் தற்போது இங்கிலாந்து ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்கும் மார்க் கார்னே என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இங்கிலாந்தில் கடந்த 300 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி கவர்னராக இங்கிலாந்து நாட்டைச் சாராத ஒருவர் கவர்னராக நியமிக்கப்பட்டது முதல்முறையாக இருந்தது.

ஒருவேளை ரகுராம் ராஜன் இங்கிலாந்து ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டால், இங்கிலாந்து நாட்டைச் சாராத ஒருவர் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்படுவது 2-வது முறையாகும். 2-வது வெளிநாட்டவர் எனும் பெருமையையும் ராஜன் பெறுவார்.

சமீபத்தில் இது குறித்து கருத்து தெரிவித்த தற்போதைய கவர்னர் மார்க் கார்னே, இங்கிலாந்து ரிசர்வ் வங்கிக்கு அடுத்த கவர்னராக வெளிநாட்டைச் சேர்ந்தவரே நியமிக்கப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளது எனத் தெரிவித்தார்.

இந்தியாவையும், தமிழகத்தைச் சேர்ந்த ரகுராம் ராஜன் மீது இங்கிலாந்து ரிசர்வ் வங்கியும், அரசும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளது. சிகாகோ பல்கலையைச் சேர்ந்த மிகச்சிறந்த பொருளாதார நிபுணரான ரகுராம் ராஜன் பெயர் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

55 வயதாகும் ரகுராம் ராஜன் தவிர்த்து, பிற பொருளாதார நிபுணர்களான கேத்தரின் துசாக் மில்லர் பெயரும் பரிசீலிக்கப்படுகிறது. இதில் ரகுராம் ராஜன் பணியாற்றும் சிகாகோ பல்கலையைச் சேர்ந்தவர்தான் கேத்தரின் துசாக் மில்லர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவரான சிறிதி வதேரே பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக கடந்த 2013-ம் ஆண்டு பொறுப்பேற்ற ரகுராம் ராஜன் அந்தப் பதவியில் 3 ஆண்டு காலம் இருந்தார். இவர் கவர்னராக வந்தபின், வங்கிச் சீர்திருத்தம், அந்நிய முதலீட்டைப் பங்குச்சந்தையில் அதிகப்படுத்துதல், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை அதிகப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவரின் காலத்தில் ரிசர்வ் வங்கியிடம் அந்நியச் செலாவணியின் கையிருப்பு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2003 முதல் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராக ரகுராம் ராஜன் செயல்பட்டார். அதன்பின் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக 2013 முதல் 2016 வரை 3 ஆண்டுகள் பணியாற்றினார். தற்போது, சிகாகோ பல்கலையில் பிசினஸ் ஸ்கூலில் பேராசிரியராக ரகுராம் ராஜன் பணியாற்றி வருகிறார்.

கடந்த 2008-ம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த ரிசர்வ் வங்கி ஆண்டுக் கூட்டத்தில் பேசிய ரகுராம் ராஜன் உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மந்தநிலை வரப்போகிறது, அதற்கு ஏற்றவாறு கொள்கைகளை வகுக்காத நாடுகள் மிகுந்த சிரமப்படும் என எச்சரித்தார். அதற்கு ஏற்றார்போல் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதார சிக்கல்களைச்சந்தித்து. பொருளாதார சிக்கல்களை முன்கூட்டியே கணித்துக்கூறிய சிறப்பு பெற்றவர் ரகுராம்ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: