மாமனிதர் மருத்துவர் மூர்த்தி அவர்களோடு நான் – 4ம் ஆண்டு நினைவேந்தல் இன்று! – அக்னி

மாமனிதர் மருத்துவர் மூர்த்தி அவர்களோடு நான் - 4ம் ஆண்டு நினைவேந்தல் இன்று! - அக்னி

மாமனிதர் மருத்துவர் மூர்த்தி அவர்களோடு நான் – 4ம் ஆண்டு நினைவேந்தல் இன்று! – அக்னி

தமிழ் உலகில் எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டு வந்தவர்தான், மருத்துவர் ஐயா மூர்த்தி என்கிற மாமனிதர் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி. மருத்துவர் ஐயா மூர்த்தி அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று. ஈழம் திருகோணமலையில் 03.09.1951 ஆண்டு பிறந்து மருத்துவராக பணியாற்றி கடைசியாக 27.02.2013 ஆண்டு லண்டனில் காலமானார். அவர் வாழ்ந்த இடைப்பட்ட காலத்தில் தனது தமிழ் மண்ணிற்காகத்தான் பெரும்பகுதியை செலவிட்டு வந்தார் என்றால் அது மிகையாகாது. 2009-ல் ஈழத்தில் பெரும் பின்னடைவை சந்தித்தது முதல், மனமுடைந்து இறுதி நாட்களை நகர்த்தி வந்தார் என்பது அவருடன் பழகி வந்த அனைவரும் அறிந்த ஒன்று.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


மருத்துவர் ஐயா மூர்த்தி அவர்கள் என்னோடு பல முறை நேரிடையாக பழகி, உடனிருந்தாலும் :

மாமனிதர் மருத்துவர் மூர்த்தி அவர்களோடு நான் - 4ம் ஆண்டு நினைவேந்தல் இன்று! - அக்னி

மாமனிதர் மருத்துவர் மூர்த்தி அவர்களோடு நான் – 4ம் ஆண்டு நினைவேந்தல் இன்று! – அக்னி

1. 2009ம் ஆண்டும் மார்ச் இரண்டாம் வாரத்தில் இயக்கம் நெருக்கடியான நேரத்திலிருந்த பொழுது, இயக்கத்தின் வேண்டுகோளின் படி சென்னைக்கு வந்து என்னுடன் 10 நாட்களுக்கு மேல் இருந்து, அவருடன் பல இடங்களுக்கு பயணப்பட்டது வாழ்வில் மறக்க இயலாதது. இங்கிருந்த நேரத்தில், பல தமிழ் தலைவர்கள் என்று சொல்லப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என சொன்னதன் பேரில், எனது மகிழுந்தில் ஒவ்வொரு நாளாக பலரையும் நேரிடையாக சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்து, அவர்கள் அனைவரிடத்திலும், ஈழத்தில் உள்ள மிக நெருக்கடியான நிலையை எடுத்துரைத்து இன்னும் வேகமான போராட்டங்களை, இந்திய அரசிற்கும், உலகத்திற்கு அதிக அழுத்தத்தை தரக்கூடிய போராட்ட நெறிமுறைகளை பின்பற்ற அழுத்தம் கொடுத்த பொழுதும், சிலர் ஏளனமாக, ஊதாசீனம் செய்ததை நேரிடையாக கண்டு மன நொந்து, புலம்பியதை கண்கூடாக பார்க்க முடிந்தது. இந்திய மத்திய அரசின் எதிர்கட்சி தலைவர்களையும் சந்தித்து ஈழத்தில் உள்ள மக்களின் நிலைமைகளை குறித்து பகிரப்பட்டது. இதன் பயனாக சிறு மாற்றங்கள் பார்க்க முடிந்ததே தவிர, பெரியதொரு தாக்கத்தை உருவாக்க இயல முடியாமற் போயிற்று என்பது நிஜம். அவருடன் பயணப்பட்ட அந்த நாட்களில், ஈழத்தின் இரண்டாம் கட்ட தலைவர்களோடு தொலைபேசி வழியே பேசக்கூடிய வாய்ப்பு பல முறை எனக்கு கிடைத்தது. பேசும் பொழுதே, அங்குள்ள எதார்த்த நிலையை அறிந்து கொள்ள முடிந்தது. புலிகளின் முக்கிய தலைவரான புலித்தேவன் பேசியது இன்னும் காதில் ஒலிக்கிறது, “அண்ணா, ஒரு நாள் நாங்களெல்லாம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் பொழுது, அங்கு எல்லோரும் வேடிக்கைதான் பார்க்க போகிறார்கள்”. இதை கேட்ட பொழுது இதயம் ஒரு நொடி நின்று இயங்கியதையும், இன்னும் அவர் பேசியதை காதுகளில் ஒலித்து கொண்டிருப்பதையும் கேட்க முடிகிறது. சொன்னது போலவே, அடுத்த சில வாரங்களில் நடந்தது. ஆம் இங்கிருந்த 7 கோடி மக்களும் வேடிக்கை தான் பார்த்து கொண்டிருந்தனர்.

மாமனிதர் மருத்துவர் மூர்த்தி அவர்களோடு நான் - 4ம் ஆண்டு நினைவேந்தல் இன்று! - அக்னி

மாமனிதர் மருத்துவர் மூர்த்தி அவர்களோடு நான் – 4ம் ஆண்டு நினைவேந்தல் இன்று! – அக்னி

2. மருத்துவர் ஐயா மூர்த்தி அவர்கள் 2009-ல் தமிழகம் வந்து சென்ற சில மாதங்கள் கழித்து என்னை அழைத்து ஆதரவு கோரினார். ஈழ ஆதரவுக்காக 2000-வது ஆண்டு 8 மாதங்களுக்கு மேல் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறைப்பட்டிருந்த நாள் முதலே, மேலும் ஈழ விடுதலையில் வேகமான ஈடுபாட்டுடனேயே செயலாற்ற வேண்டும் என உறுதி கொண்டு தொடர்ந்து பல்வேறு மனித உரிமை விடையங்களில் செயலாற்றி வந்திருந்தேன். அப்படிபட்ட நிலையில், ஐரோப்பிய தமிழர்களால், ஈழ மக்களின் ஆதரவுக்கான கேப்டன் அலி என்ற கப்பலில் நிவாரணப் பொருட்களை ஏற்பாடு செய்திருந்த கருணை தூதுவன் (Mercy Mission) என்ற அமைப்பில் அங்கமாக இருந்து வந்த மருத்துவர் ஐயா மூர்த்தி அவர்கள் தொலைப்பேசி வாயிலாக என்னை அழைத்து கப்பல், இலங்கை அரசால் திருப்பி அனுப்பப்பட்டதையும், அதற்கு எனது ஆதரவு தேவை என்பதையும் சொன்ன வேளையில், உடனடியாக என்ன வேண்டுமோ அதை செய்ய உடன்படுகிறேன் என வாக்குறுதி அளித்தேன். அதன்படி, மாநில அரசு, மத்திய அரசு மற்றும் செஞ்சிலுவை சங்கங்களின் ஆதரவை பெற்று, கப்பல் சென்னைக்கு எடுத்து, அதிலிருந்து பொருட்களை வேறு கப்பலுக்கு மாற்றி, ஈழத்தில் அன்றிருந்த மெனிக் முகாமில் உள்ளோர்க்கு அப்பொருட்களை சேர்க்கப்பட்டது மன நிறைவை எற்படுத்திய செயல்பாடுகளாகும்.

மேற்குறிப்பிட்ட வரலாற்று சிறப்பு மிக்க இந்த இரு நிகழ்ச்சிகளை தவிர பல்வேறு செயல்பாடுகளில், மருத்துவர் ஐயா மூர்த்தி அவர்களோடு இணைந்திருந்தது, இன்று மலரும் நினைவுகளாக மகிழ்ச்சியை தருகிறது. அன்னாரது கனவுகளை செயல்படுத்த நம்மவர்களின் முயற்சி இப்பொழுதும் தேவைப்படுகிறது. செயல்படுத்து நாம் இணைவோம்.

குறிப்பு : மருத்துவர் ஐயா மூர்த்தி அவர்கள் காலமான அன்று லண்டன் ஐபிசி வானொலியில் அவரது இறப்பு செய்தி நேரலையாக ஒலிபரப்பு செய்யபட்ட பொழுது லண்டன் ஈழம் ரஞ்சன் அந்நிகழ்ச்சியில் ஐயா குறித்து பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு எங்களது நன்றியை உரித்தாக்குகிறோம்.

– அக்னி, ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பேரவை

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: