மொரிசியஸ் நாட்டின் புதிய நிதியமைச்சராக பதவியேற்று இருக்கும் தமிழர் திரு.ரங்கநாதன் படையாட்சி!

மொரிசியஸ் நாட்டின் புதிய நிதியமைச்சராக பதவியேற்று இருக்கும் தமிழர் திரு.ரங்கநாதன் படையாட்சி!

மொரீசியஸ் நாட்டின் நிதி அமைச்சராக ரெங்கநாதன் படையாட்சி பதவி ஏற்றுள்ளார். இதற்கு முன்பு மொரீசியஸ் வங்கியின் தலைவராகவும், அந்நாட்டின் நிதிக்குழு தலைவராகவும் இருந்த அவர், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் போராளி சோசலிச இயக்கம் (Militant Socialist Movement) வெற்றி பெற்றதை அடுத்து, தமிழரான ரெங்கநாதன் படையாட்சி நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.

முன்பு 2004 – 2011 ஆண்டுகளில், மறைந்த ராதாகிருஷ்ணன் படையாட்சி அவர்கள், தென் ஆப்பிரிக்க நாட்டின் பொதுத்துறை, நிர்வாகத்துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: