லண்டனில் கொரோனாவிற்கு வெற்றிகரமாக தப்பி பிழைத்த தமிழ் பெண் ஜோதி கேசவன்!

லண்டன் நகரில் மட்டும் கிட்டத்தட்ட 10 தமிழர்கள் இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இந்த இக்கட்டான நிலையில் நல்ல செய்தியாக ஒரு தமிழ் பெண் ஜோதி கேசவன் தப்பி நல்ல முறையில் வீடு வந்து சேர்ந்தார்.

கொரோனா தாக்கி கிரோடன் ஹெல்த் சேவை (Croydon Health Services) மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழ் பெண் ஜோதி கேசவன் நோயாளியாக சில நாட்கள் இருந்து வந்தார். பின்னர் அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவத்தின் பயனாக தற்போது முழு குணமடைந்து அவரது வீட்டிற்கு மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார். அவருக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் கை தட்டி மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்தனர்.

உலகத் தமிழர் பேரவை-யின் சார்பாக நாமும் அவரை வாழ்த்துவோம்.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com
#Covid19 #CoronaTamils

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: