ஆறே வயதான குழந்தை ஹர்ணிகா, பிரான்சில் கொரோனா தாக்கி மரணம்!

குழந்தை ஹர்ணிகா [வயது 6 ] என்ற பெண் குழந்தை கடந்த புதன் கிழமை (08-04-2020) அன்று கொரோனா தொற்றுத் தாக்கி மரணமடைந்தார். அவர் மொறிஸ் – தேவகேசரி ஆகியோரின் அன்பு மகள் ஹர்ணிகா – மடோனா ஆவார். அவரது குடும்பம் பிரான்சில் வில்லியே லூபல் பகுதியில் வசித்தனர். பூர்வீகமாக ஈழத்தில் யாழ்ப்பாணம் கரம்பன் பகுதியை சேர்ந்தவர்கள். குழந்தை ஹர்ணிகா செந்தனி தமிழ்ச் சோலையின் மழலையர் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை ஹர்ணிகாவோடு உறவுகளாக கார்த்திகனின் பாசமிகு தங்கையும், கரம்பனைசேர்ந்த காலஞ்சென்ற மரியதாஸ்- அஞ்சலா (கனடா) வேலணையை சேர்ந்த ஸ்கந்தபுரம் கிளிநொச்சியில் வசித்த காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை- கமலாதேவி (இலங்கை) ஆகியோரின் அன்பு பேத்தியும், இவர் மார்க்கஸ்- றெஜின்(கனடா) மக்மிலன் றக்ஸ்ரன் -ஒறின்அனுசா (கனடா) மெல்வின்றோயிஸ்- குளோடியா(கனடா) யோகசீலன்- தனகேசரி (தர்சி- லண்டன்) ஆகியோரின் அன்பு பெறாமகளும், மிதுசா, ஆரோன், எரிக்கா, பியாங்கா, நிலா, லுக்காஸ், ஹனிஸ்கா ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார். இவர் சிவகேசரன் (சிவா) மாவீரர்,அரசகேசரன்-(ரூபன்)-திருச்செல்வி (ஸ்கந்தபுரம் கிளிநொச்சி, பராகேசரன் (பரா) -கஸ்தூரி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மருமகளும் ஆவார். துசானி,துசான் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

குழந்தை ஹர்ணிகா இழப்பு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் இறந்த துயரத்தில் உலகத் தமிழர் பேரவையும் பங்கு கொள்கிறது.

ஹர்ணிகாவின் இறுதி நிகழ்வு வரும் 14.04.2020 செவ்வாய் கிழமை அன்று நடைபெறும்.

இடம் : நேரம் : 3.00 pm
Ets Lescarcelle
57 rue Jules Ferry
95400 Villiers-le-Bel

தொடர்பு : 0652523874

குழந்தை ஹர்ணிகா – உதித்தது : 23-07-2014 – மறைந்தது : 08-04-2020

அக்னி சுப்ரமணியம்
தலைவர்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: