3,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட, பிரித்தானியாவில் பலியான ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதி அஞ்சலி!

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட, பிரித்தானியாவில் பலியான ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதி அஞ்சலி!

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட, பிரித்தானியாவில் பலியான ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதி அஞ்சலி!

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் கண்ணீரின் மத்தியில் இடம் பெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வு.

பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் மூழ்கி பலியான ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று லண்டனில் நடைபெற்றன.சோக மயமான லண்டன்.

காலை 6 மணி முதல் பத்துமணி வரை Winn’s Common Park, King’s High Way, Plumstead Common, London, SE18 2LN எனும் இடத்தில் இறுதி நிகழ்வுகள் மூவாயிரத்துக்கு மேல்பட்ட மக்களின் மக்களின் கண்ணீரின் மத்தியில் இடம்பெற்றன. கடந்த 24ஆம் திகதி கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் இறுதிக் கிரியை நிகழ்வானது, கடல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தமை புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது. இதில் கெனூஜன் சத்தியநாதன், கோபிகாந்தன் சத்தியநாதன், நிதர்சன் ரவி, இந்துஷன் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் குருசாந்த் ஸ்ரீதவராஜா ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். மக்கள் அதிகமாகக்கூடும் பிரித்தானிய கடற்கரைகளில் உயிர்காப்பு பணியாளர்களின் பற்றாக்குறை குறித்த வாதப்பிரதிவாதங்களையும் இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணொளிகள் …

https://www.youtube.com/watch?v=8Rwo8jgZPdA
https://www.youtube.com/watch?v=4dBZYYELnis

ஆவணித் திங்கள் 24ம் திகதி 2016 அன்று இங்கிலாந்தின் கடற்பரப்பில் காவு கொண்டு எம்மை விட்டு பிரிந்த உறவுகளான சத்தியநாதன் கேனுசன், சத்தியநாதன் கோபிநாதன், ஸ்ரீஸ்கந்தராசா இந்துசன்,ஸ்ரீ தவராசா குருசாந்த், ரவி நிதர்ஷன் ஆகியோரின் நினைவாக.

-ஈழம் ரஞ்சன்

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தமிழர் அதிகமாக வாழும் “ரீ-யூனியன் தீவு”... தமிழர் அதிகமாக வாழும் “ரீ யூனியன் தீவு” தமிழ்நாட்டுக்கு அதிகம் தெரியாத இடம். தமிழ் நாட்டில் பலர் கேள்விப்படாத இடம். ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழு...
புலிகளின் இயக்கத்திற்கு எதிரான கருத்துக்கள் இடம் ப... என்னதான் புலிகளுக்கு எதிரான கருத்தாக இருந்தாலும், தமிழ் மக்கள் மனதில் இடம்பெற்ற தலைவன் பிரபாகரன் படம் போடாமல் எந்த புத்தகமும் இந்த பூலோகத்தில் விற்பனை...
இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை..... இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவ...
Tags: 
%d bloggers like this: