தமிழின இன அழிப்புக்கு பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பிரித்தானிய பாராளுமன்றத்தில் மாநாடு!

தமிழின இன அழிப்புக்கு பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பிரித்தானிய பாராளுமன்றத்தில் மாநாடு!

தமிழ் இன அழிப்பு நடைபெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும், மேலும் மீண்டும் ஒரு இன அழிப்பு நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்னும் கோரிக்கையை வலியுறுத்தி பிரித்தானிய தமிழருக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்றக் குழு இன்று 24 ஐப்பசி 2019 காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை பிரித்தானிய வெஸ்ட்மின்ஸ்ரர் பாராளுமன்ற கட்டிடத்தில் மாநாடு நடைபெற்றது.

உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இன அழிப்பு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர்கள், ஆய்வாளர்கள் மாநாட்டில் பங்குபெற்றனர். அவர்களுடன் ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை பிரிவின் ஆய்வாளர்கள் மற்றும் பிரித்தானியாவின் சட்ட வல்லுனர்கள் பங்குபெற்ற இம்மாநாட்டில் மதிப்பிற்குரிய பிரித்தானிய ராணியின் அதிகாரிகள், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலானோர் பங்கேற்றனர்.

இம்மாநாட்டின் வாயிலாக இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு நடைபெற்றுள்ளதை சர்வதேச சமூகம் நிருபிக்க வேண்டிய அவசியம் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன அழிப்பு திட்டங்கள் பற்றிய முழுமையான விழிப்புணர்வினை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: