உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தமிழர்கள் சிலரும் வெளிநாடுகளில் தொடர்ந்து உயிரிழந்து வரும் தகவல்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.
பிரித்தானியாவில் மட்டும் நேற்று வரை இரண்டு தமிழர்களும் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இன்றைய (ஏப்ரல் 09, 2020 – வியாழக்கிழமை) தினம் லண்டனில் இளைஞரான தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை பூநகரியின் மேனாள் கோட்டக் கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகன் ஆனந்தவர்ணன் (வயது 30) தான் இன்று இலண்டனில் கொரோனா தொற்றினால் காலமானார். பூநகரி பிரதேச சபையின் முன்னை நாள் உறுப்பினராகவும், TTN தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் என பல ஆளுமைகளை பெற்றிருந்தார்.
பிரான்சில் குறுகிய காலத்திலேயே நிரந்தர குடியுரிமை பெற்று, நோர்வேயில் வசித்து வந்துள்ள நிலையில் தற்போது அவசிய காரணத்தால் இலண்டன் சென்ற நிலையிலேயே. இவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகி இறந்துள்ளார். மிகச்சிறந்த ஆளுமை மிக்க ஊடகவியலாளரை இன்று தமிழ் மண் இழந்து தவிக்கிறது.
அக்னி சுப்ரமணியம்
தலைவர்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com
Pingback: குமரன் வேலு