விடுதலைப் புலிகள் பற்றி பேசி இராஜினாமா செய்த விஜயகலாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி!

விடுதலைப் புலிகள் பற்றி பேசி இராஜினாமா செய்த விஜயகலாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி!

விடுதலைப் புலிகள் பற்றி பேசி இராஜினாமா செய்த விஜயகலாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி!

`விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்’ எனப் பேசிய விஜயகலா மகேஸ்வரன் இலங்கையின் ராஜாங்க கல்வி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

தனி ஈழம் கோரி பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் போராடிவந்தது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு விடுதலைப்புலிகள் அமைப்பு மீது கடுமையான போர் தொடுத்தது. கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது, யாழ்ப்பாணம் பகுதிகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அதேபோல, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உட்பட அவரது குடும்பத்தினர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இதன்பின் சில ஆண்டுகள் கழித்து நடந்த அரசியல் மாற்றத்தில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மைத்ரிபால சிறிசேனா இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அமைச்சரவையில் சில தமிழ் அமைச்சர்களும் இடம்பெற்றனர். அந்த வகையில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் பணியாற்றிவந்தார்.

இதற்கிடையே, கடந்த ஜூலை மாதம் 2018 யாழ்ப்பாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜயகலா,

”கடந்த 3 ஆண்டுக்கால ஆட்சியில் யாழ் பகுதிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்தபோது, எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது நாங்கள் உணருகிறோம். நாங்கள் நிம்மதியாக வாழவும் நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்கவும் எங்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்ப வேண்டுமாகவும் இருந்தால் வடக்கு-கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை ஓங்கவேண்டும்.”

“அண்மையில் யாழில் பாடசாலை செல்லும் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று ஜனாதிபதி தனது கட்சியை வளர்க்கிறார். எங்களுடைய மக்களை அவர் காப்பற்றவில்லை.”

“நாங்கள் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போதுதான் உணர்கின்றோம்,” என்று கூறியிருந்தார். ஆனால் இப்போதோ, இங்கு பாலியல் குற்றங்கள்தான் அதிகரித்துள்ளன. இதற்காகவா நாங்கள் அதிபரைத் தேர்ந்தெடுத்தோம். அதிபர் இப்போது கட்சியை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறாரே தவிர, தமிழ் மக்களைக் காப்பாற்றுவதில்லை. நாங்கள் உயிருடன் வாழ வேண்டுமானால், எங்களது பிள்ளைகள் காப்பாற்றப்பட வேண்டுமானால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்” எனப் பேசினார்.

ஆளும் கட்சியின் அமைச்சராக இருந்தவரே அரசை இவ்வாறு விமர்சித்துப் பேசியது இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. அனைத்து எம்.பி-க்களும் விஜயகலா பதவி விலக வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கினர். இதனால் விஜயகலா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு யாழ்ப்பாண கிளிநொச்சி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மீண்டும் இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட அமைச்சர்கள் நியமனத்தின் போதே அவருக்கு கல்வி ராஜாங்க அமைச்சர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 50 நாள்களுக்கும் மேலாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்ததால், 16-ம் தேதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு மீண்டும் பிரதமர் ஆனார். அவரைத் தொடர்ந்து தற்போது விஜயகலாவும் பதவியேற்றுள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: