“வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீகம்: ஆக்கிரமிப்பை எதிர்க்கும் தமிழர்கள்”!

"வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீகம்: ஆக்கிரமிப்பை எதிர்க்கும் தமிழர்கள்"!

“வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீகம்: ஆக்கிரமிப்பை எதிர்க்கும் தமிழர்கள்”!

நெடுங்கேணி, ஒழுமடு வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீகம். அதனைத் தொல்லியல் திணைக்களம் பறிக்க முற்படக் கூடாது என்று வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் கோரியுள்ளது. இதனை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழர்களின் இருப்பு இன்று பல வழிகளில் மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும், கையகப்படுத்தப்பட்டும் வருகின்றது. இந்த சூழ்நிலை நீடிக்குமானால் எல்லா அடையாளங்களையும் இழந்த சமூகமாக தமிழினம் மாறிவிடும். நமது இருப்புகளை நாமே காப்பாற்ற வேண்டிய காலகட்டத்தில் இன்று இருக்கின்றோம், அதனால் இவற்றை எதிர்ப்பது காலத்தின் தேவை. வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்துக்கும், நமது அந்தணர் ஒன்றியத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு எனவே அதைக் காக்க வேண்டிய கடமை நமக்குண்டு. அனைவரும் தங்கள் உணர்வுகளை இதில் வெளிப்படுத்தி நமது நிலங்களை நாங்கள் காப்பதற்கு முன்வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>