இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு வழக்கு தொடர முடிவு!

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு வழக்கு தொடர முடிவு!

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு வழக்கு தொடர முடிவு!

முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசில் அமைச்சராக இருந்து அவரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்ட வென்றவர் சிறிசேனா. விக்ரமசிங்கேயின் உதவியுடன், கடந்த 2015-ம் ஆண்டு அதிபராகப் பதவி ஏற்றார் சிறிசேனா. இதையடுத்து, அதிபர் சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியும், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தன.

3 ஆண்டுகள் சென்ற நிலையில், இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே கடந்த 26-ம் தேதி அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, அதிபர் மைத்திரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனால் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெறும் நோக்கில் அதிக எம்.பி.க்கள் கொண்ட தமிழ் தேசியக் கூட்டணியின் ஆதரவைப் பெறும் நோக்கில் அதன் தலைவர் ரா. சம்பந்தனைச் சந்தித்து அதிபர் சிறிசேனா பேசினார். ஆனால், அதற்கு மறுத்துவிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு, ரணிலுக்கு தங்கள் வழங்கும் ஆதரவில் உறுதியாக இருந்தனர்.

இந்த சூழலில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற பேச்சு நிலவியது. இந்நிலையில், நேற்று இரவு நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். மேலும், 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும் நிலையில் திடீரென கலைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

19 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு முரணாக ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகியுள்ளதாக பல தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“19 வது திருத்த சட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதியால் இப்போது நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும். உடனடியாக யாரும் நீதிமன்றத்தை நாடக்கூடாது என்பதற்காகவே வெள்ளிக்கிழமை நள்ளிரவு நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பை மைத்திரிபால சிறிசேன வெளியிட்டார். இதனால் இரண்டு நாட்கள் தாமதப்படுத்தப்படுகிறது எனவும் நான் மட்டுமல்ல இன்னும் பல சட்டத்தரணிகளும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர். நாளை மறுநாள் திங்கள்கிழமை உயர்நீதிமன்றத்தை நாடுவேன்” என சுமந்திரன் தெரவித்தார்.

கடந்த 26 ஆம் தேதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தையும் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஒத்திவைத்தார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் போதிய எம்.பிக்களின் ஆதரவை பெற மஹிந்த தரப்பினர் மும்முரமாக முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவை மஹிந்த தரப்புக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தன.

அரசியலில் நேரெதிர் துருவங்களான தமிழ் தேசிய கூட்டணி, ஜனதா விமுக்தி பெரமுன ஆகியவற்றின் தலைவர்கள் சந்தித்து பேசியதுடன், ஜனநாயகத்தை காப்பாற்ற ஒத்துழைக்கப் போவதாகவும் அறிவித்தனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு; 2019, ஜனவரி 5-ம் தேதி... இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு; 2019, ஜனவரி 5-ம் தேதி தேர்தல் - அதிபர் சிறிசேனா அதிரடி உத்தரவு! பிரதமர் ராஜபக்சேவுக்கு ஆதரவு இல்லாத நிலையில், நம்பிக்கை...
இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா மீது லஞ்ச ஆணையக்குழ... இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா மீது லஞ்ச ஆணையக்குழுவில் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தினர் புகார்! இலங்கை சபாநாயகர் கரு. ஜெயசூரியா மீது லஞ...
அடுத்த தமிழின துரோகி : ராஜபக்சேவை ஆதரித்து அமைச்சர... அடுத்த தமிழின துரோகி : ராஜபக்சேவை ஆதரித்து அமைச்சரான தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி சதாசிவம் வியாழேந்திரன்! இலங்கையின் தற்போதைய பரபரப்பில் முக்கியத்துவம...
இலங்கை பிரதமராக பொறுப்பேற்றார் ராஜபக்சே!... இலங்கை பிரதமராக பொறுப்பேற்றார் ராஜபக்சே! இலங்கை அரசியலில் உச்சக்கட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே இன்று முறைப்...
Tags: