வட மாகாணத்தில் உள்ள போர் நினைவு சின்னங்களை நீக்க சி.வி விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் மங்கள!

வட மாகாணத்தில் உள்ள போர் நினைவு சின்னங்களை நீக்க சி.வி விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் மங்கள!

வட மாகாணத்தில் உள்ள போர் நினைவு சின்னங்களை நீக்க சி.வி விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் மங்கள!

நாட்டிலுள்ள எமது சகோதரர்களுக்கு எதிராகவே நாம் போரிட்டுள்ளோம் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அண்மையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேனஸ்வரன் வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் மங்கள இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணத்தில் உள்ள அனைத்து போர் நினைவு சின்னங்களையும் நீக்க வேண்டும் என மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார். அவரின் கருத்து மிகவும் சரியானது. இது நாட்டை பிரிக்கும் கருத்தாக அமையாது. விக்னேஸ்வரனுக்கு அவ்வாறு கூறுவதற்கு உரிமை உள்ளது. நாம், வெளிநாட்டு சக்திகளுடன் போரிடவில்லை. நாட்டிலுள்ள நமது சகோதரர்களுடனே போரிட்டோம். தற்போது போர் நிறைவுக்கு வந்துள்ளது. இந்லையில் போர் நினைவுச் சின்னங்களை அமைத்து கொண்டிருப்பதற்கு நேரம் இல்லை. தற்போது நாம் அனைவரும் நாட்டை கட்டியெழுப்பும் நேரமே உள்ளது. நான் இதனை ஊடகவியலாளர்களிடமும் கூறுவேன். விக்னேஸ்வரனிடமும் கூறுவேன் என அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: