தொடரும் கேப்பாபிலவு மக்களின் போராட்டம் – உலகத் தமிழர்கள் அனைவரும் இவர்கள் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்!

தொடரும் கேப்பாபிலவு மக்களின் போராட்டம் - அனைவரும் இவர்கள் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம் !

தொடரும் கேப்பாபிலவு மக்களின் போராட்டம் – அனைவரும் இவர்கள் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம் !

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்ட நிலங்களை கையளிப்பதற்காக வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் கிராம மக்கள் அங்கு சென்றிருந்தனர். எனினும் எந்தவொரு அதிகாரியும் நிலங்களை அளந்து கையளிப்பதற்கு வருகை தராத நிலையில், தமது நிலங்கள் மீண்டும் வழங்கப்படுவது குறித்து உறுதி மொழி வழங்கும் வரை அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகைத் தந்த வன வளத்திணைக்கள அதிகாரிகள் குறித்த நிலங்கள் வன வளத்திணைக்களத்திற்கு சொந்தமானது எனவும் கூறியுள்ளார். இதனை கேட்ட அங்குள்ள மக்கள் இராணுவ முகாமிற்கு அருகில் கூடாரம் அமைத்து இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சம்பவ இடத்தில் விமானப் படையின் அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள அதே வேளையில், வன விலங்குத்துறை அதிகாரிகளுடனும் பொது மக்கள் வாய் தகராரில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், சம்பவ இடத்தில் இராணுவ புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அந்த பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். எம் நிலத்தில் வாழ நாம் எவ்வளவு போராட வேண்டியுள்ளது என்று மக்கள் வேதனை தெரிவித்தனர்.

சொந்த மண்ணை மீட்கும் போராட்டத்தில் கேப்பாப்புலவு மக்கள் – அணிதிரள்வோம் எமது உரிமையை மீட்க்க :

முல்லைத்தீவில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பிலுள்ள தமது நிலங்களை மீண்டும் வழங்க முடியாது என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும், முல்லைத் தீவு விமானப்படை தளபதியும் கூறியுள்ளனர். இதனை கேட்ட கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முல்லைத்தீவு விமானப்படை முகாமின் இரண்டாவது பிரதான வாயில் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர்.

சமரச முயற்சிகள் தோல்வி, சொந்த மண்ணை மீட்கும் போராட்டத்தில் தொடர்ந்தும் கேப்பாப்புலவு மக்கள் :

எனினும் எந்தவொரு அதிகாரியும் நிலங்களை அளந்து கையளிப்பதற்கு வருகை தராத நிலையில், தமது நிலங்கள் மீண்டும் வழங்கப்படுவது குறித்து உறுதி மொழி வழங்கும் வரை அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து வனவளத் திணைக்களத்தினருடன் கலந்தரையாடி நிலங்களை வழங்குவது குறித்து அறிவிப்பதாக தொலைபேசி ஊடாக பிரதேச செயலாளர் வழங்கிய உறுதிமொழியை ஏற்பதற்கும் மக்கள் மறுத்தனர்.

தமது நிலங்களை தம்மிடம் மீட்டு தருமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ள பிலவுக் குடியிருப்பு கிராம மக்களை மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் சி.குணபாலன் மற்றும் முல்லைத்தீவு இராணுவத்தளபதி மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அதிகாரி அத்தியேட்சகர், மற்றும் மக்கள் பிரதிநிதிகளான வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன், புவனேஸ்வரன், சிவநேசன் ஆகியோர் நேரில் சந்தித்து மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு சமரச முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். எனினும் வெற்று வாக்குறுதிகளை விட தமது நிலங்கள்தான் தமக்கு வேண்டும் எனவும் தமது போராட்டத்தை அது வரையில் கைவிடப் போவதில்லை எனவும் மக்கள் உறுதியாக தெரிவித்து தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தில் அளவுக்கு அதிகமான காவலர்கள் குவிகப்பட்டிருந்ததோடு அதிகளவு போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது. இந்த நிலையில் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக பெருமளவிலான இளைஞர்கள் அப்பகுதிக்கு வருகை தந்திருந்ததோடு தன்னால் ஆன உணவு, குளிர்ப்பானம் போன்ற உதவிகளையும் வழங்கியிருந்தனர். அது மட்டும் இல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் அதிகளவிலான பெண்களும் சிறுவர்களும் குழந்தைகளும் ஈடுபட்டுள்ளதால் இரவு நேரத்தில் அவர்களுக்கான வெளிச்ச வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என போராட்டகாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு அந்த இடத்தை சுற்றிலும் இராணுவ முகாம்கள் அமைந்துள்ளதால் இரவு வேளைகளில் உரிய பாதுகாப்பும் தமக்கு வழங்கப் பட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மக்களால் முற்றுகை :

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் அனைத்து வாயில்களை அடைத்தும் புதுக்குடியிருப்பு மக்கள் கதவடைப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் உள்ள தமது நிலங்களை 682 ஆவது படைப்பிரிவு ஆக்கிரமித்து முகாம் அமைத்துள்ளதாகவும் தமது வாழ்வியல் பிரதேசங்களை விடுவிக்குமாறும் கேப்பாப்புலவு மக்களின் நிலம்களில் இருந்து இராணுவம் வெளியேறுமாறு கோரியும் புதுக்குடியிருப்பு மக்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடமை நிமித்தம் பிரதேச செயலக்திற்கு வந்த ஊழியர்கள் வெளியில் காத்திருக்கும் நிலைமையும் சேவைகளைப் பெற வந்த மக்களும் வெளியில் காத்திருக்கும் நிலைமையையும் நேர்ந்தது.

தீர்வு எப்போது :

விமானப்படையினர் வசமுள்ள 30 ஏக்கர் நிலங்களை விடுவிப்பதாக அரச அதிகாரிகள் மக்களுக்கு தெரிவித்த போதிலும் குறித்த தினத்தில் விடுவிக்கப்படவில்லை. இதன் காரணமாக குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என 50 க்கும் மேற்பட்ட கேப்பாப்புலவு குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, உணவு, தண்ணீர் மற்றும் உறக்கமின்றி இப்போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படுவதாகவும் இதனால் ஒருவர் மயக்கமுற்ற நிலையில் மருத்துவ வாகனம் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்யடுத்து தொடர்போராட்டமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இரவு சம்பவ இடத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின தலைவர் ஆனந்தசங்கரி மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் சென்று மக்களின் நிலைமைகளை நேரடியாக கண்நிலம்த்தனர். இருந்தும் அரசு தரப்பிடம் இருந்து எந்த விதமான தீர்வும் கிடைக்கவில்லை. இதுவரை பல அரசியல் தலைவர்கள், முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட பலர் பார்வையிட்ட போதும் சரியான தீர்வு எட்டவில்லை. அரசு தரப்பிடம் இருந்து எந்த விதமான தீர்வும் கிடைக்கவில்லை.

84 குடும்பங்களுக்குரிய நிலங்களை விடுவிக்குமாறு கோரியே இம்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதுவரை எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்கவில்லை. இதில் சின்னஞ்சிறு பிள்ளைகளின் கூட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் யார் கண்ணிலும் படவில்லை.

விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் நிலங்களை விடுவிக்க வேண்டும் எனக்கோரி பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படைத்தளம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குறித்த போராட்க்களத்துக்கு வருகை தந்த முல்லை மாவட்ட அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் குணபாலன் ஆகியோர் மக்களிடம் உங்களின் நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்படும் என தெரிவித்தனர். இதில் மக்களிடம் கருத்து தெரிவித்த அரச அதிபர், சற்று முன்னர் எனக்கு மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் நிலங்கள் யாவும் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு செயலருடன் தான் மேற்கொண்ட கலந்துரையாடலின்படி முடிவெடுக்கப் பட்டுள்ளதாகவும் எனவே இந்த தகவலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடம் தெரிவிக்குமாறு தெரிவித்தார். இதேவேளை போராட்டத்தை கைவிட்டு செல்லுமாறும் கேட்டுக் கொண்டார். இவ்வாறு பலரின் உறுதி மொழிகளைக் கேட்டு தாம் ஏமாற்றமடைந்துள்ளதாக அம்மக்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன், தமது நிலத்திற்க்குள் கால்பதிக்கும் வரை நாங்கள் தமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனவும் அரசாங்க அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.

சொந்த நிலங்களை விடுக்ககோரி புதுக்குடியிருப்பு மக்களால் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம் :

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் உள்ள தமது நிலங்களையும் வீடுகளையும் இராணுவம் விடுவிக்க வேண்டும் எனக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் இன்று முதல் சுழற்சி முறையிலான அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பிரதேசசெயலாளர் ம.பிரதீபனை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையிலேயே அவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்றுமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் கடந்த 3 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தை வெளியேற்றும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது புதுக்குடியிருப்பில் :

இராணுவத்தினர் உடன் வெளியேறி தமது நிலங்களை விடுவிக்க வேண்டும் எனக்கோரி முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மக்கள் நீராகாரம் எதுவுமின்றி உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்த நிலையில், அவர்களுக்கான ஆதரவு பெருகி வருகின்றது. இராணுவத்தினர் அத்துமீறிப் பிடித்து வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி, புதுக்குடியிருப்பு மக்கள் கடந்த 3ஆம் தேதி போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். நிலங்களைப் பிடித்து வைத்துள்ள இராணுவ முகாம் முன்பாக – புதுக்குடியிருப்பு பிரதேச செயலக முன்பக்கத்தில் அமர்ந்திருந்து தொடர் போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

கடந்த 13 ஆம் தேதி திங்கள் கிழமை வரையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள், அதன் பின் போராட்ட வடிவத்தை மாற்றிக் கொண்டனர். சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்வது என்று அவர்கள் தீர்மானித்தனர். தொடர்ச்சியாக சுழற்சி முறையில் ஏனையோர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்த தீர்வும் எட்டவில்லை. கடந்த 14 ஆம் தேதி காலை உண்ணாவிரதம் ஆரம்பித்த மூன்று போர் அடங்கிய குழு 48 மணிநேரம் கடந்த நிலையில் அவர்கள் உண்ணாவிரதத்தினை காலை முடித்துக் கொண்டனர். இந்த நிலையில் தொடர்ந்தும் மூன்று போர் அடங்கிய குழு உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கருத்து தெரிவிக்கையில் :

இந்த சுழற்சி முறை உண்ணாவிரத போராட்டத்தில் ஒரு முடிவு கிடைக்கும் என்று நம்புகின்றோம். அப்படி கிடைக்கவில்லை என்றால் நாங்கள் எமது போராட்டங்களின் வடிவங்களை மாற்றி, எமது நிலத்திற்க்குள் செல்லும் வரை எமது ஜனநாயகப் போராட்டம் தொடரும். இதைத்தவிர வேறு வழியில்லை என்று கூறி அவர்களின் போராட்டத்தினை தொடர்கின்றனர். மேலும், உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்துள்ள குழுக்களில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் படித்த, படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேப்பாப்பிலவு மக்களைப் போன்றே, புதுக்குடியிருப்பு நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 2 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பேராட்டம், சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றம் பெற்றுள்ளது. தமது சொந்த நிலங்களை மீட்பதற்கான, முல்லைத்தீவு மக்களின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது. புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களுக்கு சொந்தமான 49 ஏக்கர் நிலம்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரதிநிதிகள் கடந்த வாரம் கொழும்பிற்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம் பெற்றது. எனினும் இந்த சந்திப்பில் சிங்களம் தமது ஆதிக்கத்தை காண்பித்ததின் அடிப்படையில் மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி ஆரம்பித்த இந்த போராட்டம் தீர்வின்றிய நிலையில் தொடர்வதாகவும், எனினும் தமக்கான தீர்வினை விரைவாக வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். 60 வருடத்திற்கு மேலாக குறித்த நிலம்களில் வசித்து வந்த புதுக்குடியிருப்பு மக்கள், 2009 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்று, மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

எதிரிகளாக பார்க்காது மனிதர்களாக மதியுங்கள்-பரவிப்பாஞ்சான் மக்கள் :

நிலங்களை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கும் தம்மை எதிரிகளாகப் பார்க்காது மனிதர்களாக மதித்து தமது நிலங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்பாக பொதுமக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்காக, கடந்த ஏழு வருடங்களாக கையகப்படுத்தப்பட்டிருக்கும் தமது நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி மாலை முதல் 17 குடும்பங்கள் இராணுவ முகாமுக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டம் தொடர்ந்த போதிலும், மக்களின் நிலங்களை விடுவிக்க எந்தவொரு தரப்பினரும் முன்வராததை அடுத்து அப்பகுதி மக்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இதற்கிடையில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரடியாக சென்ற எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் இந்த விடயம் தொடர்பில் பேசியுள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்குள் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார். எனினும் இரண்டு வாரங்களுக்கு தமது போராட்டத்தை மக்கள் ஒத்திவைத்திருந்த நிலையில், குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியின் பிரகாரம் மூன்று ஏக்கர் நிலம் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது ஏனைய 15க்கும் அதிகமான குடும்பங்களுக்கான 10 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில், எஞ்சிய 10 ஏக்கர் நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், போராட்டம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் 03 மாத காலப்பகுதிக்குள் இராணுவத்திடம் உள்ள நிலங்கள் விடுவிக்கப்படும் என உறுதியளித்திருந்தார். கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி, விஜயகலா மகேஸ்வரன் அளித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், மீண்டும் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதே வேளை போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஆகியோர் நில பிரச்சனை குறித்து மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரான்சில் கவனயீர்ப்பு போராட்டம் :

கேப்பாபுலவு மக்கள் போராடத்துக்கு ஆதரவாக பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களால் பிரான்ஸ் மனிதஉரிமை சதுக்கத்தில் நடத்தப்படும் கவனியீர்ப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இம்மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தாயகம், புலம் எங்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் நிலங்கள் மக்களிடமே வழங்கப்பட வேண்டும், மக்களுக்கு நிம்மதியான வாழ்வு ஏற்பட வழி செய்ய வேண்டும் என தெரிவித்து புலம் பெயர் தமிழர்களால் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக இணையவழி கையெழுத்து போராட்டம் :

ஸ்ரீலங்கா விமானப்படையினர் வசமுள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து பெறும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்வாறு பெற்றுக் கொள்ளப்படும் கையெழுத்துக்கள் பிரித்தானிய நாடாளுமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. http:// change.org மூலமான இணையவழி மனுப்புரட்சி.”Land grabbing by Sri Lanka govt. forces – Save war battered Tamils in Kepapulavu” என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பினை அழுத்துவதன் மூலம் பறிக்கப்பட்ட தமது வாழ்விடங்களுக்காய் போராடும் கேப்பாபிலவு மக்களுக்கான மனுவினை உலகின் எப்பகுதியில் இருந்தும் பதிவுசெய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் :

கேப்பாப்புலவு மக்களின் பூர்வீக நிலம் மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலைத்துறையிலுள்ள அனைத்து பிரிவுகளிலும் கற்கும் தமிழ் மாணவர்கள் கலந்து கொண்டனர். கேப்பாப்புலவு மக்களின் நிலங்களை உடனடியாக விடுங்கள், இராணுவமே வெளியேறு, தமிழ் மக்களை சுதந்திரமாக வாழ விடு உட்பட பல பதாதைகளை ஏந்தியவாறு சத்தம் எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் நிலம் மீட்பு போராட்டமானது கடந்த 31 ஆம் தேதி ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகுவீர்கள் – கேப்பாபுலவு மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த சிங்களம் :

தொடரும் கேப்பாபிலவு மக்களின் போராட்டம் - அனைவரும் இவர்கள் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம் !

தொடரும் கேப்பாபிலவு மக்களின் போராட்டம் – அனைவரும் இவர்கள் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம் !

எமது மண்ணை கொள்ளை ஆக்கிரமித்து நயவஞ்சக தனமாக குடி கொண்டுள்ள சிங்கள இன்வெறியர்கள் எமது சொந்த நிலத்தில் கால் வைக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியிலுள்ள தமது நிலங்களை மீண்டும் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு படையினரின் அச்சுறுத்தல் பல்வேறு வடிவங்களில் விரிவடைந்து வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கேப்பாபுலவு பகுதியில் உள்ள நிலம்யில் போடப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், இது விமானப் படை நிலம்யாகும், தேவையில்லாமல் உட்செல்லல் தடை, தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான நிலம்களின் ஒருபுற வேலி அடைக்கப்படாது காணப்பட்ட நிலையில் அந்த பகுதியில் இந்த அறிவித்தல் பலகை போடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குழப்பமடைந்துள்ளனர். தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருவோரையும் தங்களையும் விமானப்படையினர் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்து அச்சுறுத்தலை விடுவித்து வருவதாக கேப்பாபுலவு மக்கள் குற்றம் சாட்டியிருந்த நிலையில் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் வகையில் இது குறித்த அறிவித்தல் பலகை போடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா விமான படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் நிலம்களில் இருந்து விமான படையினர் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் போரட்டத்தில் ஈடுபடும் சிலரை மது பாவனைக்கு அடிமையாக்கி அவர்கள் ஊடாக போராட்டத்தை குழப்ப படையினர் சதித்திட்டம் தீட்டிவருவதாகவும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அவ்வாறான சம்பவங்கள் சில இடம் பெற்றதாகவும் எந்த தடை வந்தாலும் தாம் நிலம்க்குள் செல்லும் வரை போராட்டம் நிறுத்தப்படாது எனவும் கேப்பாபுலவு மக்கள் உறுதிபட கூறியுள்ளனர். இந்த நிலையில் தமது போராட்டத்திற்கு அச்சமின்றி பூரண ஆதரவு வழங்குமாறும் கோரிய நிலையில் விமானப்படையினரின் இந்த அறிவித்தல் பலகை தம்மை அச்சுறுத்தும் நடவடிக்கை என கேப்பாபுலவு மக்கள் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடலுக்கு கிழக்காக அமைந்துள்ள பிலவுக்குடியிருப்பில் உள்ள, 84 குடும்பங்களுக்கச் சொந்தமான நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 31 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றி இன்றும் முன்னெடுக்கப்படுகிறது. அந்த வகையில் மக்களின் இந்த போராட்டத்திற்கும் இன்றும் பலர் தமது ஆதரவுகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் :

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன்னால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பரவிப்பாஞ்சானில் இராணுவத்தின் அச்சுறுத்தல் மத்தியிலும் தொடரும் நிலமீட்பு போராட்டம் :

கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்திடமுள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்ததுடன், அச்சுறுத்தலும் விடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்பாக பொதுமக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்காக, கடந்த ஏழு வருடங்களாக கையகப்படுத்தப்பட்டிருக்கும் தமது நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி மாலை முதல் 17 குடும்பங்கள் இராணுவ முகாமுக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டத்துக்கு ஆதரவாக கிளிநொச்சியில் சந்தை வர்த்தகர்கள் கதவடைப்பு :

கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சியில் கதவடைப்புடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணமால்போகச் செய்யப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டம் தீர்வுகளற்ற நிலையில் இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தியும் காணாமல் போகச் செய்யப்பட்டோர் குறித்து தீர்க்கமான முடிவொன்றை வழங்குமாறும் வலியுறுத்தி காணாமல் போனோரின் உறவினர்கள் உறுதியான கொள்கையுடன் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சியில் உள்ள பொதுச்சந்தை வர்த்தகர்கள், கதவடைப்பில் ஈடுபட்டதுடன், கவனயீர்ப்பு ஊர்வலமொன்றையும் முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும், கந்தசுவாமி ஆலயம் வரை சென்றதுடன் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருடன் வர்த்தகர்களும் இணைந்து ஆதரவளித்தனர். நல்லாட்சி அரசாங்கம் என்பது பெயரளவில் மாத்திரம் நல்லாட்சி என்ற பெயரில் இருக்காது, உறவுகளைத் தேடி அலையும் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றாது விரைவில் உரிய தீர்வை வழங்குமாறு கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ள காாணமல் பேனோர் சங்கத்தின் தலைவி நி.ஆனந்தலீலாவதி, தீர்வு வழங்கப்படாவிட்டால் போரட்ட வடிவத்தில் மாற்றம் எற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று 24 ஆவது நாளாக கேப்பாபுலவு மக்கள் நிலம் மீட்பு போராட்டம். பரவிப்பாஞ்சான் மக்கள் 4 வது நாளாக போராட்டம். புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 21 வது நாளை எட்டியுள்ளது. இந்தநிலையில் புதுக்குடியிருப்பு பொதுமக்களால் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று 10வது நாளை எட்டியுள்ளது .

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: