காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்!

வவுனியாவில் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று 14ஆவது நாளாகவும் இரவு, பகலாக தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப் பட வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் மேற்கொண்ட சாகும் வரையான உணவு தவிர்ப்புப் போராட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டதுடன் கொழும்பில் இடம் பெற்ற பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அவர்கள் மீண்டும் தமது போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் ஆகியோரில் ஒருவர் நேரில் வந்து சாதகமான பதில் வழங்கும் பட்சத்தில் மட்டுமே தமது போராட்டத்தை நிறுத்துவதாகவும், அதுவரை தமது உறவுகளைத் தேடிய போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டார்களா? அப்படியானால் உத்தரவிட்டது யார்? பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சை :

வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் காணாமல் போனவர்கள் குறித்து பாராளுமன்றில் இன்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இறுதி யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் படைத்தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்..? அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இன்று எத்தனை பேர் உயிருடன் இருக்கின்றனர்..? உயிருடன் இருப்பார்களாக இருந்தால் அவர்களின் பெயர் விபரங்களை வெளிப்படுத்த வேண்டும். அத்துடன், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த தகவல்களையும் வெளிப்படுத்த வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர் அனைவரும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றிருக்கலாம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் இந்த கருத்தை பிரதமர் தெரிவித்திருந்தார். மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அப்படி கொலை செய்யப்பட்டிருப்பார்களானால், அதற்கு உத்தரவு கொடுத்தது யார்…? இறுதி யுத்தத்தின் போது முன்னாள் போராளிகளை சரணடையுமாறு படைத்தரபினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது..? இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் குறித்து இராணுவத்தினரிடமே விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

அப்போது மட்டுமே காணாமல் போனவர்கள் குறித்த உண்மையினை கண்டறிய முடியும். எனினும், இராணுவத்தினரை விசாரணை செய்ய அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அப்படியாயின் எவ்வாறு உண்மையினை கண்டுப்பிடிக்க முடியும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இதேவேளை, காணாமல் போனவர்கள் குறித்து வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் 18ஆவது நாளாக தொடரும் போராட்டம் :

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 18ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20.02.2017 அன்று காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: