என்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி! – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்!

என்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி! - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்!

என்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி! – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்!

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா நேற்று 16-10-2018 நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றைக் கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் பேசுகையில், தன்னைக் கொல்ல சதி நடப்பதாகக் குற்றம்சாட்டியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டத்தில் பேசிய சிறிசேனா, `என்னைக் கொல்லை சதி நடக்கிறது. இதற்குப் பின்னணியில் இந்தியாவின் உளவு அமைப்பான RAW இருப்பதாகச் சந்தேகம் உள்ளது” என்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்தத் தகவல் இந்திய பிரதமர் மோடிக்குத் தெரியாது என்றும் அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதிபரின் இந்தப் பேச்சு அங்குக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகளுக்கே அதிர்ச்சி அளித்ததாகவும், எனினும் அதிபர் பாதுகாப்பு விஷயம் என்பதால் கவனமுடன் இருப்பதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் இரண்டு தினங்களில் இலங்கை பிரதமர் இந்தியா, வரவுள்ள நிலையில் அதிபரின் கருத்து இந்திய – இலங்கை உறவில் விரிசலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: