தமிழக மீனவர்களின் 118 படகுகளை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

தமிழக மீனவர்களின் 118 படகுகளை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

தமிழக மீனவர்களின் 118 படகுகளை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


தமிழக மீனவர்கள் பாரம்பர்யமாக மீன்பிடித்து வரும் பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துச் செல்வது தொடர் நிகழ்வாக நடந்து வருகிறது. 2014-ம் ஆண்டு வரை இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களும், படகுகளும் இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று விடுவிக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 184 விசைப்படகுகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வந்தனர். படகுகளை மீட்டுத் தரக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் படகுகள் விடுவிக்கப்படவில்லை. இதனிடையே இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் பல கடல் கொந்தளிப்பில் சிக்கியும், பராமரிப்பு இல்லாததாலும் கடற்கரைப் பகுதிகளில் மூழ்கி கிடக்கின்றன.

இந்நிலையில், கடந்த மாதம் இவற்றில் 10 படகுகளை மட்டும் தமிழக மீனவர்கள் எடுத்துச் செல்ல இலங்கை அரசு அனுமதித்தது. இதனால் மற்ற படகுகளின் நிலை கேள்விக்குறியாக இருந்து வந்தது. மேலும், இலங்கை அரசு பிடித்து வைத்துள்ள படகு ஒன்றுக்கு தலா 25 லட்சம் இழப்பீடு தரக் கோரி மீனவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனிடையே நேற்று இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை மற்றும் மன்னார், பருத்திதுறை நீதிமன்றங்கள் இலங்கை அரசின் வசம் உள்ள 50 படகுகளை விடுவிக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அந்தப் படகுகள் இலங்கைக் கடற் தொழில்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று 118 படகுகளை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. விடுவிக்கப்பட்ட அனைத்துப் படகுகளும் இலங்கை மீனவளத்துறை அதிகாரிகள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட இந்தப் படகுகள் அனைத்தும் இலங்கை காரைநகர், காரஞ்சி, காங்கேசன்துறை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கையினால் தமிழக மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், படகுகள் தற்போது இருக்கும் நிலையை அறிந்த பின்னரே அவற்றை மீட்டு வர முடியுமா என்பது தெரியவரும் என்பதால் முழுமையாக மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 168 படகுகள் தவிர மேலும் 6 படகுகள் மற்றும் கடந்த வாரங்களில் பிடிபட்ட 5 படகுகள் உள்ளிட்ட 11 படகுகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: