இலங்கை நாடாளுமன்றம் 5 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது!

இலங்கை நாடாளுமன்றம் 5 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது!

இலங்கை நாடாளுமன்றம் 5 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது!

இலங்கை நாடாளுமன்றம் நேற்று (19/11/2018) பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. அமைதியாக நடந்த சபை அமர்வுகள் 5 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டன. வரும் 23 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றம் பிரதி சபாநாயகர் ஆனந்தகுமார தலைமையில் கூடியது. சபை ஆரம்பிக்கப்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேச ஆரம்பித்தார். ”கடந்த 14, 15, 16-ம் தேதிகளில் சபையில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகள் வேண்டும்” எனக் கூறி அமர்ந்தார். இதனைத் தொடர்ந்து பேச ஆரம்பித்த தினேஸ் குணவர்தன, நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆளும் கட்சி தரப்பில் இருக்க வேண்டும் எனக் கூறினார்.

இதனை எதிர்த்த ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. மங்கள சமரவீர, அரசாங்கம் இல்லையெனில், எவ்வாறு பெரும்பான்மை உறுப்பினர்களை வழங்க முடியும் என எதிர் கேள்வியெழுப்பினார்.
உறுப்பினர்களுக்கு மிகக் குறுகிய காலமே பேசுவதற்கு வழங்கப்பட்ட நிலையில், அடுத்த வாய்ப்பு ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வழங்கப்பட்டது.

‘நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஒரு கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், தெரிவுக் குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களை வழங்க முடியாது” என்று கூறினார். இதன்பின்னர், பேசத் தொடங்கிய பிரதி சபாநாயகர், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசப்பட்ட தெரிவுக்குழு குறித்து உரிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். 23 ஆம் தேதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுகிறது.” என்று அறிவித்து சபை அமர்வுகளை முடித்துக் கொண்டார்.

மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து தீர்மானிப்பதற்காக தெரிவுக்குழுவை அமைப்பது என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டிருந்தது.

பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கிறது. சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல் செய்யப்பட வேண்டும் என ஆளும் கட்சி கோருகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: