ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை பதவியேற்றது.
அந்த வகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பல அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. இதில் முக்கியமாக வடமாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு ஆகிய துறைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ளார். அக்டோபர் 26 ஆம் தேதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி தணிந்து ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.