வேந்தராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே ஆதரவு புத்த துறவி ஆனந்த தேரா.. பட்டம் பெற மறுத்த பல்கலைக்கழக மாணவர்கள்!

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முருத்தெட்டுவே ஆனந்த தேர என்ற புத்த மதத் தலைவரை வேந்தராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சில மாணவர்கள் அவரிடம் இருந்து பட்டங்களைப் பெற மறுத்துவிட்டனர். இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இலங்கையில் அமைந்துள்ள கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முருத்தெட்டுவே ஆனந்த தேர என்ற புத்த மதத் தலைவர் வேந்தராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், இதற்கு அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பட்டமளிப்பு விழா இந்நிலையில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. முருத்தெட்டுவே ஆனந்த தேரவின் நியமனத்தால் ஏற்பட்ட அதிருப்தியால் இந்த பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கப்போவதாக The Faculty of Management and Finance Teachers’ Association எனப்படும் நிதி ஆசிரியர் சங்கம் (FMFTA) ஏற்கனவே அறிவித்துவிட்டது. மாணவர்கள் எதிர்ப்பு இருப்பினும், சில மாணவர்கள் மட்டும் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். அவர்களும் கூட முருத்தெட்டுவே ஆனந்த தேரவின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர்.

மேலும், மாணவர்கள் கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரவிடம் இருந்து தங்கள் சான்றிதழ்களைப் பெற மறுத்தும், தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். யார் இவர் கொழும்பு பல்கலைக்கழக வேந்தராக உள்ள முருத்தெட்டுவே ஆனந்த தேர புத்த மதத் தலைவர் ஆவர். மேலும், அவர் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படுகிறார்.

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச கடந்த மாதம் தான், முருத்தெட்டுவே ஆனந்த தேரவை வேந்தராக நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அரசியல் நோக்கத்திற்காக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்துள்ள மாணவர்கள் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கடந்த மாதம் இலங்கை அதிபருக்குக் கடிதம் எழுதினர். 

இந்நிலையில் இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா சமயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில் விறுவிறுவேன நடந்து வரும் மாணவி ஒருவர், தனது பட்டத்தை முருத்தெட்டுவே ஆனந்த தேரவிடம் இருந்து வங்க மறுக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது,


Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: