மேனாள் போராளிகள் குழுவான புளொட் அலுவலகத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது!

மேனாள் போராளிகள் குழுவான புளொட் அலுவலகத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது!

மேனாள் போராளிகள் குழுவான புளொட் அலுவலகத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதியில் உள்ள மேனாள் போராளிகள் குழுவும், தற்போது ஓட்டு அரசியலில் ஈடுபட்டுள்ள புளொட் அமைப்பின் அலுவலகத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உள்ளூராட்சி மன்ற தேர்தல், கூட்டமைப்புக்குள் உருவாகியுள்ள பிரிவு, ஆசன பங்கீடு என பல சிக்கல்கள் நடைபெற்றுவரும் வேளையில் இந்த ஆயுத மீட்பு பல திருப்பங்களை உருவாக்கும் என சொல்லப்படுகிறது.

புளொட்டின் முன்னாள் உறுப்பினர் தங்கியிருந்த வீட்டிலிருந்து பயன்படுத்த தக்க துப்பாக்கிகள், அவற்றுக்குப் பயன்படுத்தும் மகசின்கள், ரவைகள் மற்றும் ஆரிவாள்கள் என்பன இன்று மீட்கப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவற்றைப் பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் புளொட்டின் மேனாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார் என்றும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றிலிருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன என தெரிவிக்கப்படுகிறது. அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வீட்டில் புளொட்டின் மேனாள் உறுப்பினர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவரை அந்த வீட்டிலிருந்து வெளியேற சொன்னதையடுத்து மறுப்புத் தெரிவித்துள்ளார். ஆதனால், வீட்டு உரிமையாளர் தனது வழக்குரைஞர் மூலம் யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். நீதிமன்றின் தீர்ப்பையடுத்து அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்ற யாழ்ப்பாணம் காவல்துறையினர் அங்கு சென்றனர்.

அங்குள்ள பொருள்களை வெளியேற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த அலுமாரி ஒன்றுக்குள் துப்பாக்கிகள் காணப்பட்டன. ஏகே47 துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் கோல்ட்ஸர் 2, ரவைகள் 396, கைத்துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, வோக்கிகள் 2 மற்றும் 2 வாள்கள் மீட்கப்பட்டன.

அதனையடுத்து புளொட்டின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேர்ந்த சிவகுமார் (வயது 55) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று காவல்துறையினர் கூறினர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: