கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி!

கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி!

கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி!

கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 129-ஆவது அமர்வு இன்று காலை ஆரம்பமானது. இதில் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபை இரங்கள் தெரிவித்து, 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்துமாறு, அவைத் தலைவர் சீ.வி. கே.சிவஞானம் அறிவித்தார்.

இதனையடுத்து அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தியதுடன், முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கான அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர். இந்த உரை அமரர் மு.கருணாநிதியின் குடும்பத்தாருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: