ஜே134 நவாலி வடக்கு முதியோர் சங்க முதியோருக்கான அன்பளிப்பு நிகழ்வும், ஆடித் திருவிழாவும் 01.08.2017 மாலை 3.30 மணியளவில் ஜே134 நவாலி வடக்கு முதியோர் சங்கத்தில் நவாலி வடக்கு முதியோர் சங்கத் தலைவர் டாக்டர். சோ. சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக லண்டன் பட்டயச் செயலாளரும், வடக்கு மாகாணசபை அவைத் தலைவருமாகிய திரு. சீ. வீ. கே. சிவஞானம் A.C.I.S.JP யாழ். மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு.என். விந்தன் கனகரட்ணம் மற்றும் திரு. சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோரும், சிறப்பு விருந்தினராக சண்டிலிப்பாய் வலி தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி யசோதா உதயகுமார் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ஜே134 நவாலி வடக்கு கிராம அலுவலர் திரு. அ. தனபாலசிங்கம், சண்டிலிப்பாய் தென் மேற்கு பிரதேச செயலக சமூக சேவை அலுவலர் திருமதி. தர்மினி றஜீவன், வடமாகாண சத்தியசாயி சமிர்த்தி தலைவர் திரு. ந. சிவநேசன், சமூக சேவையாளர் திரு. இ. செல்வநாயகம் மற்றும் வலி. தென்.மேற்கு முதியோர் இல்ல சங்கங்களின் சமாசத் தலைவர் திரு. ல. ஜீவரட்ணம் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்த நிகழ்வின் போது, முதியோர் சங்கத்திற்கு லண்டன் பட்டயச் செயலாளரும், வடக்கு மாகாணசபை அவைத் தலைவருமாகிய திரு. சீ. வீ. கே. சிவஞானம் A.C.I.S.JP யாழ். மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. என். விந்தன் கனகரட்ணம் மற்றும் திரு. சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோர் அன்பளிப்புப் பொருட்களையும் நிதிப் பங்களிப்பையும் வழங்கப்பட்டு சிற்பிக்கப்பட்டது.