முல்லைத்தீவு அருகே பல வருடங்களாக மரத்தில் சிக்கிய வெடிகுண்டு மீட்பு!

முல்லைத்தீவு அருகே பல வருடங்களாக மரத்தில் சிக்கிய வெடிகுண்டு மீட்பு!

முல்லைத்தீவு அருகே பல வருடங்களாக மரத்தில் சிக்கிய வெடிகுண்டு மீட்பு!

முல்லைத்தீவு அருகே தோட்டம் ஒன்றின் மரத்தில் சிக்கியிருந்த வெடிகுண்டை சுற்றி மரத்தின் கிளை வளர்ந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்காலில் தோட்டத்தின் உரிமையாளர் வெடிகுண்டை கண்டுபிடித்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையிடம் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மரத்திற்குள் சிக்கியிருந்த குண்டை வெளியே எடுப்பதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் அதனை சுற்றி மரக் கிளைகள் வளர்ந்திருந்தமையால் அதனை வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

காவல் துறையினர் குறித்த இடத்தை பாதுகாப்பான இடமாக்கி காவல் துறையின் சிறப்பு அதிரடி படையினர் வரவழைத்துள்ளனர். காவல் துறையினர் மரத்தின் கிளைகளை அவதானமாக வெட்டி மரத்தின் நடுவில் சிக்கியிருந்த குண்டை வெளியே எடுத்துள்ளனர்.

இறுதி யுத்தம் நடந்தபோது இந்த குண்டு விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்டிருக்கலாம் எனவும் அது நீண்ட காலமாகியமையினால் அதனை சுற்றி மரத்தின் கிளைகள் வளர்ந்திருக்கும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: