கிளிநொச்சி மாவட்டம் புன்னை நீராவிக் கிராமத்திற்கு இரு கிராம சேவகர்களை நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை!

கிளிநொச்சி மாவட்டம்  புன்னை நீராவிக் கிராமத்திற்கு இரு கிராம சேவகர்களை நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை!

கிளிநொச்சி மாவட்டம் புன்னை நீராவிக் கிராமத்திற்கு இரு கிராம சேவகர்களை நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 69 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 200 பேர் வாழும் புன்னை நீராவிக் கிராமத்திற்கு 2017ம் ஆண்டிலாவது மேலும் இரு கிராம சேவகர்களை நியமிக்க உரியவர்கள் ஆவண செய்யவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள புன்னை நீராவிக் கிராமத்தில் மட்டும் 2 ஆயிரத்து 69 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 200 பேர் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு வாழும் இக்கிராமம் ஒரு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியாகவே இன்று வரை விளங்குகின்றது. இதன் காரணத்தினால் இம்மக்களிற்கான ஒட்டு மொத்த சேவைக்கும் ஒரு கிராம சேவகரே நியமிக்கப்பட்டிருக்கிறார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இவ்வாறு சேவை புரியும் கிராம அலுவலர் அலுவலத்தில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தே தங்களது சேவையை பெற வேண்டியுள்ளது. இதனால் மணிக்கணக்கில் காத்திருந்ததோடு மட்டுமல்லாமல் சில சந்தர்ப்பங்களில் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. கிராம சேவகரும் காலையில் அலுவலகம் வந்தால் பணியை முடித்து இரவு நேரமே வீடு திரும்புவதனால் அவரிடம் இருந்தும் எவ்வித கேள்வியை கேட்க முடியவில்லை.

இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதற்கான காரணம் ஒரு கிராமத்தில் அதிக மக்கள் தொகையாக காணப்படுவதே ஆகும். இலங்கையிலேயே அதிக மக்களைக் கொண்ட கிராம சேவகர் பிரிவாகவே இருக்க முடியும். எனவே அன்றாட பணிகளை உடனுக்குடன் நிறைவு செய்யும் வகையில் கிராம சேவகர் பிரிவினை குறைந்த பட்சம் மூன்று பிரிவுகளாக பிரிக்க வேண்டிய தேவை உள்ளது. அது மட்டுமன்றி பிரதேச, மாவட்ட மட்டத்திலான ஒருங்கிணைப்புக் குழுக்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் கிராம மக்களின் நெருக்கடியினைக் கருத்தில் கொண்டு 2017ம் ஆண்டிலாவது புன்னை நீராவிக் கிராமத்திற்கு, கிராம சேவகர் பிரிவினை மூன்று பிரிவுகளாகப் பிரித்து மூன்று கிராம சேவகர்களை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன் வைக்கின்றனர்.

இவ்வாறு குறித்த கிராம மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கை தொடர்பில் கண்டாவளைப் பிரதேச செயலாளர் முகுந்தனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘புன்னைநீராவி கிராம சேவகர் பிரிவினில் 2 ஆயிரம் குடும்பத்தைச் சேர்ந்த 6 ஆயிரம் பேர் வாழ்கின்ற தகவல் சரியானதே என்றும் இது தொடர்பினில் குறித்த கிராம அமைப்புக்கள் பலவும் பலமுறை எமது கவனத்திற்கும் குறித்த விடயம் தொடர்பினில் சுட்டிக்காட்டினர்’, என்றார்.

மேலும் அவர், ‘ஓரு கிராம சேவகர் பிரிவிற்கு உண்மையில் 500 குடும்பம் என்பதே அரசின் கொள்கையாக உள்ளது. இருப்பினும் புன்னைநீராவி கிராம சேவகர் பிரிவினை உடனடியாகவே மூன்று கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரித்து மூன்று கிராம சேவகர்கள் நியமிக்கப்படுவதன் மூலமே மக்களினதும் பணியினை இலகு படுத்த முடியும் என்கின்ற பரிந்துரையை மாவட்டச் செயலகம் வழியாக அமைச்சிற்கு சமர்ப்பித்துள்ளோம். ஆயினும், இதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. அவ்வாறு அனுமதியினை 2017ம் ஆண்டிலாவது பெறுவதற்கு முயற்சிக்கப்படும்’, என தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: