சிங்களமயமாக்கப்படும் தமிழ் இராவணனின் கன்னியா வெந்நீரூற்று!

சிங்களமயமாக்கப்படும் தமிழ் இராவணனின் கன்னியா வெந்நீரூற்று!

சிங்களமயமாக்கப்படும் தமிழ் இராவணனின் கன்னியா வெந்நீரூற்று!

இராவணன் தனது தாய்க்கு இறுதிக்கிரியைகள் செய்வதற்காக, தனது உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தி, உருவாகியதாக வரலாறுச் சான்றுகள் சொல்லும், திருகோணமலையில் உள்ள கன்னியா வெந்நீரூற்று, திட்டமிட்ட ரீதியில் தற்போது சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகாமையில் ஒரு இந்து கோவிலும் சிவன் கோவிலும் காணப்பட்டன.

தற்போது இந்த கோவில் உடைக்கப்பட்டும் சிவனாலயம் பராமரிப்பு அற்று காணப்படுகின்றன.

மறுமுனையில் திரிபுபடுத்தப்பட்ட பௌத்த வரலாறுகளை இதனுடன் தொடர்பு படுத்தி அரசியல் மயமாக்கல் இடம்பெற்று வருகின்றது.

இப்போது இந்து மத அடையாளங்கள் அருகி பௌத்த வழிபாட்டுக்குரிய அடையாளங்களே முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இப்பிரதேசம் தொல்பொருளியல் திணைக்களத்தின் பராமரிப்பில் உள்ளது. தற்போது வழங்கப்படும் நுழைச்சீட்டிலே இவை அநுராதபுரகாலத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும், பௌத்த மதத்திற்குரிய பிரதேசத்தில் அமைந்திருப்பதாகவும் தொல்பொருளியல் சான்றுகளால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: