தமிழீழ விடுதலைப் புலிகளின் மேனாள் அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் தந்தை கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை மரணம்!

ezhilan_father_krishnapillai_chinnadurai_died_21112018தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரான எழிலனின் தந்தை கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை நேற்று முன்தினம் (20-11-2018) ஈழம் கிளிநொச்சியில் உயிர் நீத்தார்.

சின்னத்துரையின் மறைந்த உடல் இறுதி மரியதைக்காக ஈழம் கிளிநொச்சியில் உள்ள அவரது வீட்டில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதி ஊர்வலம் இன்று கிளிநொச்சியில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மறைந்த கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை-யின் வயது 85 (17.04.1934 – 20.11.2018). இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல் நிலை சீராக இல்லாததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையின் மரணமடைந்தார். அன்னாருக்கு மூன்று மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். எழிலன் மூத்தவர். எழிலனின் இரு தம்பிமார்களும் வெளிநாட்டில் உள்ளனர். ஒரு தம்பி கனடா-விலிருந்து இறுதி ஊர்வலத்தில் பங்கெடுக்க ஊர் திரும்புகிறார்.

ezhilan_ananthyஎழிலன் இராணுவத்தினரிடம் யுத்தத்தின் இறுதி நேரத்தில் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாக எழிலனின் மனைவியும் வடக்கு மாகாண சபை மேனாள் அமைச்சருமான அனந்தி சசிதரன், தனது கணவரை மீட்டெடுக்க பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி தற்போது ஆட்கொணர்வு மனுவொன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அது தொடர்பான விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.

ஐயா சின்னத்துரையின் மறைந்த செய்தியை கேள்வியுற்று, நேற்று உலகத் தமிழர் பேரவை – யின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள் எழிலனின் மனைவியும் மேனாள் வடமாகாண அமைச்சரருமான அனந்தி சசிதரனுடன் தொலைப்பேசி வாயிலாக பேசி தனது ஆழ்ந்த இரங்களை பகிர்ந்து கொண்டார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: