மேனாள் வட – மாகாண முதல்வர் ஐயா திரு. விக்னேஸ்வரன் அவர்களை உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!

மேனாள் வட – மாகாண முதல்வர் ஐயா திரு. விக்னேஸ்வரன் அவர்களை உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!

வட – மாகாண மேனாள் முதல்வர் ஐயா விக்னேஸ்வரன் தமிழகத்தின் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டு தமிழகத்தின் முக்கிய நபர்களை சந்தித்து வந்தார்.

மரியாதை நிமித்தமாக உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்கள் இன்று மாலை சென்னையில் ஐயா விக்னேஸ்வரன் அவர்களை சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். ஐயா திரு. விக்னேஸ்வரன் அவர்களை திரு. அக்னி சுப்ரமணியம் ஏற்கெனவே தமிழீழத்தில் யாழ்ப்பாணத்தில் வட – மாகாண முதல்வர் ஐயா விக்னேஸ்வரன் இருந்த நேரத்தில் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: