இலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம் அழிந்து வருவதாக மக்கள் கவலை!

இலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம் அழிந்து வருவதாக மக்கள் கவலை!

இலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம் அழிந்து வருவதாக மக்கள் கவலை!

இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூரையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால், அவற்றினைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அப்பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

சங்கமன் கண்டி பிரதேசத்தின் பிரதான வீதியிலிருந்து மேற்குப் புறமாக சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், ஏராளமான புராதன சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில சின்னங்கள் கிறிஸ்துவுக்கு முன்னர் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், சில சின்னங்கள் கிறிஸ்துவுக்குப் பின்னர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை எனவும் அறியப்படுகின்றன.

மலைகளிலும் மலைகள் அருகே காணப்படுகின்ற இந்தப் புராதன சின்னங்கள், இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், அவற்றினை பாதுகாப்பதற்கான போதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என, அந்தப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

குறித்த பகுதியில் அடிக்கடி சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமையினால், அங்கு காணப்படும் மதிப்புமிக்க புராதன சின்னங்கள் சேதமடைந்தும், அழிவடைந்தும் செல்கின்றன.

இப்பகுதியில் கல்வெட்டுக்கள், நடுகல், கல்லறைகள், பாறைத்தூண்கள், மலைகளில் குடையப்பட்ட நேர்த்தியான குழிகள் மற்றும் நீர்த் தொட்டிகள் உள்ளிட்ட ஏராளமான புராதன சின்னங்களை இன்னும் காணக் கிடைக்கின்றன.

அந்த வகையில், ஆதி இரும்புக்காலம் என்று சொல்லப்படுகின்ற – பெருங்கற்காலத்தில் தமிழ் பேசிய மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்களும், தமிழ் பிராமி எழுத்துக்களும் கிடைக்கப் பெற்றுள்ள இடத்தையும், அங்கு காணப்படுகின்ற தொல்லியல் சின்னங்களையும் பாதுகாக்க வேண்டியமை அரசின் கடமையாகும்.

அனுராதபுரம் மற்றும் பொலநறுவை போன்ற இடங்களிலுள்ள தொல்லியல் சின்னங்களை அரசு பாதுகாத்து வருகின்றமை போல், சங்கமன் கண்டி பிரதேசத்திலுள்ள தொல்லியல் சின்னங்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>