கொழும்பு உணவகத்தில் தமிழ் பேசக்கூடாது என அறிவிப்பு!

தமிழ் மொழியில் உரையாட கொழும்பிலுள்ள உணவகமொன்று அதன் ஊழியர்களுக்கு தடை விதித்துள்ள சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

கொழும்பு 7 ஹொர்ட்டன் பிளேஷ் பகுதியில் உள்ள உணவகமொன்றில் தமிழ் மொழியில் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.

”அனைத்து ஊழியர்களும் கட்டாயமாக ஆங்கிலம் மற்றும் சிங்களம் மட்டுமே பேச வேண்டும். தமிழ் மொழியில் பேசக்கூடாது”என அறிவித்தல் பலகையொன்றின் ஊடாக உணவகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து, இலங்கை வாழ் தமிழர்கள் பல்வேறு எதிர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், குறித்த உணவகம் இந்த அறிவிப்பு விடுத்தமைக்கான காரணத்தை தெளிவூட்டியுள்ளது. இந்த அறிவித்தலின் ஊடாக தவறாக புரிதலை ஏற்படுத்தியுள்ளமைக்காக பொதுமக்களிடம் மன்னிப்புக்கு கேட்பதாக அந்த உணவகத்தின் நிர்வாகம் கூறியுள்ளது

ஊழியர்கள் தமிழ் மொழியில் பேசுகின்றமையினால், வாடிக்கையாளர்களை கேலி செய்வதை போன்று உள்ளதாக, வாடிக்கையாளர்களினால் புகார் அளிக்கப்பட்டதாக அந்த உணவகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: