தமிழீழத் தேசியத் தலைவர் மற்றும் விடுதலைப் புலிப் போராளிகளை ஆழமாக நேசிக்கும் சீன இளைஞர்…!!!!

china_youth_ltteசீனாவைச் சேர்ந்த வில்லியன் சீயா எனும் இளைஞர் உலகின் தாய்மொழியான தமிழ் மொழியை மிகவும் ஆழமாக நேசிப்பதோடு, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களையும் அவரின் வழி வந்த போராளிகளையும் மிகவும் அதிகமாகவே நேசிக்கிறார்.

அத்துடன் தமிழர்களுக்கான தனி நாடாக தமிழீழம் விரைவில் உதயமாகும் என்றும் அதற்காக உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் சாதி மதம் கடந்து இன ரீதியாக ஒற்றுமையுடன் ஒன்றுபட வேண்டுமெனவும் அறைகூவல் விடுக்கிறார்.

இவர், பல தடவைகள் ஈழம் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் வேதனைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லியும் இலங்கை இராணுவத்தால் சிதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களைப் பார்வையிட்டு வணங்கியும் வந்துள்ளார்.

தமிழகத்திற்குச் சென்று தமிழ் உணர்வாளர்களைச் சந்திப்பதோடு திரைத்துறை சம்மந்தப்பட்ட பலரையும் சந்தித்து இன்றுவரை அவர்களோடு தன் உறவுகளாக உறவாடி வருகிறார்.

திரு. வில்லியன் சீயா அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு :

“தமிழ் எதனால் உங்களுக்கு பிடிக்கும்..???”

“உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ் உலகில் உள்ள எல்லாமொழிகளின் தாய் மொழி தமிழே; தமிழ் மொழிபோல் சிறப்பான மொழி இவ்வுலகில் இல்லை. அதனால் எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும்.”

“தமிழீழ நாட்டைப் பற்றித் தெரியுமா..???”

“நன்றாகத் தெரியும் அது புலிகளின் தேசம் தமிழர்களின் சொர்க்க பூமி, மிகவும் அழகான தேசம்.

யுத்தத்தின் பின்னர் நான் அங்கு சென்று வந்தேன் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பார்க்கும் பொழுது வேதனையாக இருந்தது. எனது இரத்தம் கொதித்தது.”

“உங்களுக்கு பிடித்த தலைவர் யார்..???”

“பிரபாகரன், நேதாஜி, லீகுவான், சேகுவாரா இவர்களைப் போன்று மக்களுக்காக போராடிய உண்மையான போராளிகளை எனக்கு மிகவும் பிடிக்கும்.”

“யுத்தத்தைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்..???”

“தமிழர்களை அழிக்க திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைதான் இது. விடுதலைப்புலிகள் போராடாமல் இருந்திருந்தால் இன்று தமிழர்கள் என்ற இனம் அழிக்கப்பட்டிருந்திருக்கும்.”

“ஈழப்போராட்டம் பற்றி தங்களின் கருத்து..???”

“ஈழப்போராட்டம் என்பது ஈழத் தமிழர்களுக்கான போராட்டமாக நான் பார்க்கவில்லை அது ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கான போராட்டம்.

மிகவும் உண்மையான மற்றும் நேர்மையான போராட்டம்.

தமிழர்களின் நாடு கிடைக்க வேண்டும் அப்போதுதான் தமிழர்களின் மொழி, பெருமை, கலாச்சாரம் பாதுகாக்கப்படும்.”

“மாவீரர்களைப் பற்றிய உங்கள் கருத்து..???”

“உயிரைக் கொடுப்போம் என்று பலர் வாயளவில்தான் சொல்வார்கள், ஆனால் தாய் நாட்டின் விடுதலைக்காக தமது உயிரை தியாகம் செய்த கடவுள்கள்தான் மாவீரர்கள்.
இவர்களின் கனவு நிச்சயம் விரைவில் நிறைவேறும்.”

“தமிழர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது..???”

“தமிழர்கள் அனைவரும் சாதி மதம் கடந்து தலைவரின் வழிநின்று ஒற்றுமையாகச் செயல்படவேண்டும். அப்போதுதான் தமிழர்கள் வெல்ல முடியும்.

நானும் என்னைத் தமிழனாகத்தான் உணர்கின்றேன், நானும் தலைவரின் வழிநின்று தமிழரின் நலனுக்காக பாடுபடுவேன்.”

“விடுதலைப்புலிகள் பற்றி உங்களின் கருத்து…??”

“விடுதலைப் புலிகள் மிகவும் ஒழுக்கம் நிறைந்தவர்கள் மனித வாழ்வின் புனிதர்களாக இருந்து மக்களைக் காத்தவர்கள். உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த இராணுவம் விடுதலைப்புலி போராளிகள்தான்.

உண்மையாக, நேர்மையாக வாழ்கின்ற அத்தனை மனிதர்களுக்கும் விடுதலைப்புலிகளை மிகவும் பிடிக்கும்.

விடுதலைப்புலிகள் வாழ வேண்டும், தலைவர் வர வேண்டும், தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், தமிழீழம் கிடைக்க வேண்டும்,தமிழர்கள் எல்லோரும் அங்கு மகிழ்வாக வாழ வேண்டும்.”

– யாளி முகன் யாழ்ப்பாணம்

Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

One Response

  1. Pingback: S. SATHYANARAYAN

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: