சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான வர்த்தக விமான சேவை தொடங்கியது!

சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான வர்த்தக விமான சேவை தொடங்கியது!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான வர்த்தக விமான சேவைகள் இன்று (11.11.2019) அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன.

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏர் அலயன்ஸ் விமான நிறுவனத்தினால் இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஒரு வாரத்தில் மூன்று முறை இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளன. ஏர் அலயன்ஸ் நிறுவனத்தின் விமானமொன்று சென்னையிலிருந்து இன்று காலை 10.35 மணியளவில் புறப்பட்டு, பிற்பகல் 12 மணிக்கு யாழ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இவ்விமானத்தில் 15 பயணிகள் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர். பின்னர் அவ்விமானம் யாழ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு 2.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தைச் சென்றடைந்தது.

சென்னைக்கான விமான பயணத்தில் யாழ்ப்பாண வணிகர் குழு, மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உள்ளிட்டோர் சென்னை நோக்கி பயணித்தனர்.

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், கடந்த அக்டோபர் 17ஆம் தேதி ஜானதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக உள்ளக விமானச் சேவைகளுக்காக மட்டும் படுத்தப்பட்டிருந்த பலாலி விமான நிலையம் இந்தியாவின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக மீண்டும் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>